மிளைக் கந்தன்

மிளைக்கந்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 196.

பாடல் சொல்லும் செய்தி

இது மருதத்திணைப் பாடல். தலைவன் பரத்தையிடம் இருந்துவிட்டு இல்லம் மீள்கிறான். தோழி அவனை வீட்டிற்குள் நுழையாதே எனத் தடுக்கிறாள். அப்போது அவள் சொல்கிறாள்.

முன்பொருகாலத்தில் தலைவி(தலைவனின் மனைவி) வேப்பங்காயைத் தந்தாலும் அதனை இனிக்கும் தேம்பூங்கட்டி (இதுப்பைப் பூவில் செய்த கிலுக்கட்டி) என்றாய்.

பின்னொரு காலத்தில் பாரி நாட்டுப் பறம்பு மலைப் பனிச்சுனையிலிருக்கும் தெளிந்த குளுகுளு தண்ணீரைக் கொண்டுவந்து தலைவி தந்தாலும் 'சுடுகிறது, உப்புக் கரிக்கிறது' என்றாய்.

எனவே இவள் வீட்டிற்குள் நுழையவேண்டாம் என்கிறாள் தோழி.

மேலும் காண்க

"https://tamilar.wiki/index.php?title=மிளைக்_கந்தன்&oldid=12697" இருந்து மீள்விக்கப்பட்டது