மிருகா (திரைப்படம்)
மிருகா ( Mirugaa ) என்பது பார்த்திபன் இயக்கத்தில் வினோத் ஜெயின் தயாரித்து 2021இல் தமிழில் வெளியான அதிரடித் திரைப்படமாகும் . இதில் ஸ்ரீகாந்த் ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜாகுவார் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப் படம் 5 மார்ச் 2021 அன்று வெளியிடப்பட்டது.[1][2]
மிருகா | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | ஜெ. பார்த்திபன் |
தயாரிப்பு | பி. வினோத் ஜெயின் |
கதை | எம். வி. பன்னீர்செல்வம் |
இசை | அருள்தேவ் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் ராய் லட்சுமி |
ஒளிப்பதிவு | எம். வி. பன்னீர்செல்வம் |
படத்தொகுப்பு | ஆர். சுதர்சன் |
கலையகம் | ஜாக்குவார் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | ஜீ ஸ்டுடியோஸ் |
வெளியீடு | மார்ச்சு 5, 2021 |
ஓட்டம் | 127 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
- ஜான் என்கிற அரவிந்தாக ஸ்ரீகாந்த்
- லட்சுமியாக ராய் லட்சுமி
- காவல் துறை அதிகாரி விஜய்யாக தேவ் கில்
- நித்யாவாக நைரா ஷா
- சுபத்ராவாக வைஷ்ணவி சந்திரன்
- காவல் ஆணையராக அபிசேக் சங்கர்
- ஆரோஹி அனிஷா
- பூஜா ராம்
- கருப்பு பாண்டி
- வெங்கட் சுபா
தயாரிப்பு
பிரபல ஒளிப்பதிவாளர் எம். வி. பன்னீர்செல்வம் எழுதி அறிமுக இயக்குனர் ஜெ.பார்த்திபன் இயக்கியிருக்கும் இப்படத்திற்காக ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி ஆகிய இருவரும் திசம்பர் 2018இல் நடிக்கத் தொடங்கினர்.[3] இந்த படம் 2019 முழுவதும் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோனா, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் படமாக்கப்பட்டது. படத்தின் இறுதிக் காட்சி சென்னை மணிமஹாலில் படமாக்கப்பட்டது.[4] இப்படத்தில் புலி முக்கிய பங்கு வகிக்கும் என்பதை வெளிப்படுத்தி தயாரிப்பாளர்கள் படத்தை விளம்பரப்படுத்தினர்.[5] படத்தின் முதல் வண்ண சுவரொட்டி மே 2019 இல் இணையத்தில் வெளியிடப்பட்டது.[6]
படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் தனுஷ், ஆர்யா, விஜய் ஆண்டனி, பரத் ஆகியோர் 5 பிப்ரவரி 2021 இல் வெளியிட்டனர்.[7]
விமர்சனம்
படம் 5 மார்ச் 2021 அன்று தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த விமர்சகர், "படத்தின் இறுதிக் காட்சிகளில் புலியைக் கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் தரம் குறைந்த கீழே உள்ள காட்சி விளைவுகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை". என எழுதினார். சினிமா எக்ஸ்பிரஸின் விமர்சகர் இந்த படத்தில் "யூகிக்கக்கூடிய திரைக்கதை, மோசமான செயல்படுத்தல், பட்ஜெட் வரம்புகள் மற்றும் சாத்தியமற்ற காட்சி விளைவுகள் தொழில்நுட்பம் உள்ளது. இது இந்த தொடர் கொலைகாரன் படத்திற்கு இடையூறாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.[8][9] தினமலர் படத்திற்கு கலவையான விமர்சனத்தை கொடுத்தது. படம் தவறவிட்ட வாய்ப்பு என்று முடிவுக்கு வந்தது.[10]
சான்றுகள்
- ↑ "Mirugaa – Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/mirugaa/articleshow/81333054.cms.
- ↑ "Srikanth turns villain for Miruga" (in en). https://www.cinemaexpress.com/stories/news/2019/may/09/srikanth-turns-villain-for-miruga-11488.html.
- ↑ "Srikanth and Raai Laxmi team up once again for Miruga" (in en). https://www.cinemaexpress.com/stories/news/2018/dec/02/srikanth-and-raai-laxmi-team-up-once-again-for-miruga-9034.html.
- ↑ "'Mirugaa is an intense thriller'" (in en-US). 2019-09-13. https://newstodaynet.com/index.php/2019/09/13/mirugaa-is-an-intense-thriller/.
- ↑ Subramanian, Anupama (2019-09-20). "Srikanth an antihero in Mirugaa" (in en). https://www.deccanchronicle.com/entertainment/kollywood/200919/srikanth-an-antihero-in-mirugaa.html.
- ↑ "Vijay Antony launches the first look of Mirugaa starring Raai Laxmi and Srikanth". 2019-05-07. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijay-antony-launches-the-first-look-of-mirugaa-starring-raai-laxmi-and-srikanth.html.
- ↑ "The trailer of Srikanth and Raai Laxmi's Mirugaa is here – Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/the-trailer-of-srikanth-and-raai-laxmis-mirugaa-is-here/articleshow/81258907.cms.
- ↑ "Mirugaa Movie Review: An interesting idea that fails to become anything more" (in en). https://www.cinemaexpress.com/reviews/tamil/2021/mar/07/mirugaa-movie-review-an-interesting-idea-that-fails-to-become-anything-more-23163.html.
- ↑ Mirugaa Movie Review: The attempt to hold the attention of viewers with a tiger in the film's pre-climax and climax portions is laudable, but the below par VFX couldn't do justice to it, retrieved 2021-03-27
- ↑ "மிருகா - விமர்சனம் {2.25/5} : மிருகா - மிஸ்டு - Mirugaa" (in en). https://cinema.dinamalar.com/movie-review/3005/Mirugaa/.