மா. ரா. என பிரபலமாக அறியப்பட்ட மா. ராமச்சந்திரன் ஒரு எழுத்தாளரும், திரைப்பட கதை வசனகர்த்தாவும், இயக்குநரும், தயாரிப்பாளருமாவார்.

மா. ரா.

தொழில் வாழ்க்கை

சாண்டோ சின்னப்பா தேவருக்குச் சொந்தமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோர் நடித்த படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றுள் என் அண்ணன், பலே பாண்டியா, ராமன் தேடிய சீதை என்பன குறிப்பிடத்தக்கவை.[1]

திரைப்படப் பாடல்களும் இயற்றியுள்ளார். 1964 ஆம் ஆண்டு வெளியான வீராங்கனை என்ற திரைப்படத்தில் கே. ஜே. யேசுதாஸ் பாடிய இடி இடிக்குது காத்தடிக்குது சித்தத்திலே என்ற பாடல் இவர் இயற்றியதே.[2]

கல்யாண மண்டபம் (1965)[3] என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.[2] அப்பா அம்மா (1974) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சென்னை இராயப்பேட்டையில் ஒரு பதிப்பகத்தை நடத்தி நூல்களை வெளியிட்டார்.

இறப்பு

உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 81-ஆவது வயதில் சென்னை வேளச்சேரியில் 2014 ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "பழம்பெரும் வசனகர்த்தா மா. ரா. காலமானார்". தி இந்து (தமிழ் நாளிதழ்). 28 ஆகஸ்ட் 2014 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180113010336/http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6359596.ece. பார்த்த நாள்: 13 ஜனவரி 2018. 
  2. 2.0 2.1 கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக்.  – 178. 
  3. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170613055517/http://www.lakshmansruthi.com/cineprofiles/1965-cinedetails13.asp. பார்த்த நாள்: 2018-01-13. 
"https://tamilar.wiki/index.php?title=மா._ரா.&oldid=21173" இருந்து மீள்விக்கப்பட்டது