மாது பாலாஜி
மாது பாலாஜி (Maadhu Balaji), இயற்பெயர் பாலாஜி. இவர் தமிழ் மேடைக் கலைஞரும், திரைப்பட நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் நாடக எழுத்தாளர் கிரேசி மோகனின் தம்பியாவர். மாது பாலாஜி, நகைச்சுவை நாடக எழுத்தாளர் கிரேசி மோகனின் நகைச்சுவை நாடகங்களில் மாது எனும் பெயரில் நகைச்சுவை வேடங்களில் தொடர்ந்து நடித்ததால், மாது பாலாஜி என அழைக்கப்படுகிறார்.[1]
மாது பாலாஜி | |
---|---|
படிமம்:Maadhu balaji.jpg சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தில் மாது பாலாஜி | |
பணி | நகைச்சுவை நடிகர் |
இளமை
சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பாலாஜி, ஒரு வங்கியில் பணி செய்து கொண்டே கிரேசி மோகனின் நாடகங்களில் நடித்தார். பின்னர் வங்கிப் பணியிலிருந்து விடுபட்டு, 1979 முதல் கிரேசி கிரியேசன்ஸ் குழு நடத்தும் நாடகங்களில் முழுநேர நடிகராக நடிக்கத் துவங்கினார்.
நடித்த சில திரைப்படங்கள்
- சின்ன சின்ன ஆசைகள் (1989)
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- ஜெர்ரி [2] (2006)
நடித்த தொலைக்காட்சித் தொடர்கள்
மாது பாலாஜி பல தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவைகள்:
- கிரேசி மோகன், கதை, வசனம் எழுதி, எஸ். பி. காந்தன் இயக்கிய ஒன்பது தொலைக்காட்சித் தொடர்கள்.
- பிளைட் 172 மற்றும் மௌலி இயக்கிய சுந்தரம் & சன்ஸ்
- ஒய். ஜி. மகேந்திரனின் தயாரிப்பில் சின்ன மணி - பெரிய மணி
- சுஹாசினி இயக்கிய பெண்
- எஸ். பி. காந்தன் எழுதி, இயக்கிய சாருலதா தொடர்
- ஜிடிஆர் தயாரிப்பி கிரேசி மோகன் எழுதிய "சிரி-க-ம-ப-நி" தொலைக்காட்சித் தொடர்
- ஜெயா தொலைக்காட்சிக்காக கிரேசி மோகன் எழுதி, எஸ். பி. காந்தன் இயக்கிய "நில் கவணி கிரேசி"
- ஏவிஎம் நிறுவனம் தயாரித்த "ஆச்சி இண்டர்நேசனல் "
- "சிரி சிரி கிரேசி" [3]
- "கிரேசி டைம்ஸ்"
- சாக்லெட் கிருஷ்ணா [4]
மேற்கோள்கள்
- ↑ "He is one of a crazy kind". தி இந்து. 15 May 2005 இம் மூலத்தில் இருந்து 28 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071028081412/http://www.hindu.com/lf/2005/05/15/stories/2005051510670200.htm. பார்த்த நாள்: 25 May 2010.
- ↑ Jerry (film)
- ↑ Siri Siri Crazy Comedy Tv Serials
- ↑ சாக்லெட் கிருஷ்ணா