மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்
மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் 20 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இராசிபுரம் வட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், மல்லசமுத்திரத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 52,208 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,911 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 37 ஆக உள்ளது. [1]
ஊராட்சி மன்றங்கள்
மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- அவினாசிப்பட்டி
- பல்லக்குழி
- பல்லக்குழி அக்கிரகாரம்
- எரிக்கலூர் புதுப்பாளையம்
- கல்லுப்பாளையம்
- கருமனூர்
- கருங்கல்பட்டி
- கொல்லன்கொண்டாய்
- கூத்தநத்தம்
- கொட்டபாளையம்
- குப்பிச்சிபாளையம்
- மல்லசமுத்திரம் மேல்முகம்
- மாமுண்டி அக்கிரகாரம்
- மங்கலம்
- மாரப்பாறை
- மின்னம்பள்ளி
- முஞ்சனூர் 1
- மொரங்கம்
- நாகர்பாளையம்
- பாலமேடு
- பருத்திப்பள்ளி
- பில்லநத்தம்
- ராமபுரம்
- சப்பையாபுரம்
- சர்க்கார் மாமுண்டி
- வண்டிநத்தம்
- செம்பகாதேவி
வெளி இணைப்புகள்
- நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்