மனோரமா மொகபத்ரா

மனோரமா மொகபத்ரா (Manorama Mohapatra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியராகவும் இவர் முதன்மையாக ஒடியா மொழியில் இயங்கி வருகிறார். இவர் நாவல்கள் மற்றும் கவிதைகள் அடங்கிய நாற்பது புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் தி சமாச்சு என்ற ஒடியா செய்தித்தாளை வெளியிட்டும் வருகிறார். 1984 ஆம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஒடிசா சாகித்ய அகாடமி விருது உட்பட பல இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தின் இலக்கிய அமைப்பான ஒடிசா மாநில சாகித்ய அகாடமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

ஒடிசா மாநிலம் புவனேசுவரில் பிபூதி பட்நாயக்குடன் மனோரமா மொகபத்ரா, 2 டிசம்பர் 2012

வாழ்க்கை

மொகபத்ரா 1934 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை ராதாநாத் ராத், ஒடியா மொழி நாளிதழான தி சமாச்சின் ஆசிரியராக இருந்தார். ஒடிசாவில் உள்ள ராவென்சா பல்கலைக்கழகத்தில் மொகபத்ரா பொருளாதாரத்தில் இளங்கலைக் கல்வி பயின்றார்.[1] பொருளாதாரப் பாடமும் கற்பித்தார். [2] 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று மொகபத்ரா இறந்தார். இவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்பட்டது. [3]

தொழில்

தனது தந்தையால் வெளியிடப்பட்டு வந்த தி சமாச்சு என்ற தினசரி செய்தித்தாளின் கட்டுரையாளராக மொகபத்ரா தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியல் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து எழுதினார். பின்னர் இவர் அச்செய்தித்தாளின் ஆசிரியரானார். 1960 ஆம் ஆண்டில் மொகபத்ரா தனது முதல் கவிதைப் புத்தகமான யுவார் செயுந்தி உத்தேவை வெளியிட்டார், இந்நூல் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் கருப்பொருளில் கவனம் செலுத்தியது. இவர் நாவல்கள் மற்றும் கவிதைகள் உட்பட நாற்பது புத்தகங்களை எழுதியுள்ளார். முதன்மையாக ஒடியா மொழியில் எழுதிய இவர் பெங்காலியிலும். அர்த்தநாரீசுவர, பைதேகி விசார்யிதா, சங்கதிர் சம்கிதா, சக்தி ரூபேண சன்சுதிடா, ரூபம் ரூபம் பிரதிரூபம், சம்ருதி சந்தன் , சமய் புருசா மற்றும் இசுமிருதிர் நைமிசாரண்யா ஆகியவை சில குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும். இவர் ஒரு சொற்பொழிவாளராகவும் பொதுவில் நிகழ்த்தினார். [4] 1982 முதல் 1990 வரை, உத்கல் சாகித்ய சமாச்சு என்ற இலக்கியச் சங்கத்தின் தலைவராகவும், 1991 முதல் 1994 வரை, ஒடிசா சாகித்ய அகாடமியின் மாநில இலக்கியச் சங்கத்தின் முதல் பெண் தலைவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

மொகபத்ராவின் இலக்கியப் பங்களிப்புகள் அவரது மறைவுக்குப் பிறகு பொதுவில் அங்கீகரிக்கப்பட்டன. இவரது எழுத்தைத் தவிர, பல்வேறு சமூகப் பிரச்சனைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஆகியவற்றில் இவர் முக்கியப் பங்காற்றினார் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். [4] [5] பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சமகாலப் பிரச்சினைகளைக் கையாள்வது மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான அரசியல் ஆகிய கருப்பொருள்களில் மொகபத்ராவின் எழுத்து கவனம் செலுத்தியது. [4] மொகபத்ரா ஒடிசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கம், ஒரிசாவின் சமூக சேவை கில்டு மற்றும் லோக் சேவக் மண்டல் உட்பட பல தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தன்னார்வத் தொண்டு செய்தார். [2]

விருதுகள்

மொகபத்ரா தனது தொழில் வாழ்க்கையில் பல இலக்கிய விருதுகளை வென்றார். கீழ்கண்டவைகள் இதில் அடங்கும் [4] :

  • 1984 - ஒடிசா சாகித்ய அகாடமி விருது
  • 1988 - சோவியத் நேரு விருது
  • 1990 - இந்தியாவின் விமர்சகர்கள் வட்ட விருது
  • 1991 - ஈசுவர் சந்திர வித்யாசாகர் சம்மான்
  • 1994 - ரூபம்பரா விருது
  • 2013 - சரளா சம்மன் [6]
  • உத்கல் சாகித்ய சமாச்சு விருது
  • கங்காதர் மெகர் சம்மான்
  • சாகித்ய பிரவீணா விருது
  • சுசரிதா விருது

நூல் பட்டியல்

மொகபத்ராவின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் இயூவார் செயுந்தி உதே (1960) (கவிதை), பேண்டு காரரா கபத் (சிறுகதைகள்), அத்துடன் அர்த்தநாரீசுவரா, பைதேகி விசர்சிதா, சங்கதிர் சம்கிதா, சக்தி ரூபேண சன்சுதிதா, ரூபம் ரூபம் பிரதிரூபம், இசும்ருதி சந்தன், சமய் புருசா, இசுமிரிதிர் நைமிசாரண்யா, 151 கவிதைகள், பெங்காலியில் அருப் ஆலோ, யே பிருத்வி சர்சச்சுயா, மற்றும் உத்தர நிருத்தரா. [6]

மேகோள்கள்

  1. "Odia litterateur, journalist Manorama Mohapatra dies at 87" (in en). 2021-09-19. https://www.deccanherald.com/national/odia-litterateur-journalist-manorama-mohapatra-dies-at-87-1031945.html. 
  2. 2.0 2.1 "Odisha’s Manorama Mohapatra passes away at 87" (in en-US). 2021-09-18 இம் மூலத்தில் இருந்து 2021-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211205041155/https://www.utkaltoday.com/manorama-mohapatra/. "Odisha's Manorama Mohapatra passes away at 87" பரணிடப்பட்டது 2021-12-05 at the வந்தவழி இயந்திரம். Utkal Today. 2021-09-18. Retrieved 2021-12-05.
  3. bureau, Odisha Diary (2021-09-19). "Eminent Odia litterateur and journalist Manorama Mohapatra’s last rites to be performed with State honours" (in en-US). https://orissadiary.com/eminent-odia-litterateur-and-journalist-manorama-mohapatras-last-rites-to-be-performed-with-state-honours/. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Noted litterateur Manorama Mohapatra passes away at 87". https://www.newindianexpress.com/states/odisha/2021/sep/19/noted-litterateur-manorama-mohapatra-passes-away-at-87-2360829.html. "Noted litterateur Manorama Mohapatra passes away at 87". The New Indian Express. Retrieved 2021-12-05.
  5. "दुखद: ओडिशा की जानीमानी साहित्यकार मनोरमा महापात्रा का निधन, पीएम मोदी ने जताया दुख" (in hi). https://www.amarujala.com/india-news/odia-litterateur-journalist-manorama-mohapatra-passed-away-and-pm-modi-expresses-anguish. 
  6. 6.0 6.1 "Sarala Samman for Manorama Mahapatra | Sambad English" (in en-US). 2013-11-19. https://sambadenglish.com/sarala-samman-manorama-mahapatra/. 

 

"https://tamilar.wiki/index.php?title=மனோரமா_மொகபத்ரா&oldid=19136" இருந்து மீள்விக்கப்பட்டது