மது அம்பாட்
மது அம்பாட்,(Madhu Ambat) ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.[1] இந்தியத் திரைத்துறையில் பல்வேறு வகையான படங்களில் பணிபுரிந்துள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர். அமரம், அஞ்சலி மற்றும் மகரமஞ்சு போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக மிகவும் புகழ் பெற்றவர். தற்போது அவர் தமிழ்நாட்டில் சென்னையில் வசிக்கிறார். சிறந்த ஒளிப்பதிவிற்காக மூன்று முறை தேசியத் திரைப்பட விருதை வென்றிருக்கிறார்.
மது அம்பாட், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் | |
---|---|
பிறப்பு | 6 மார்ச்சு 1949 எர்ணாகுளம், கேரளம், இந்தியா |
பணி | ஒளிப்பதிவாளர், ஆவணப்பட இயக்குனர், இயக்குநர் |
பட்டம் | தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் |
பெற்றோர் | கே. பாக்யநாத் சுலோச்சனா |
வலைத்தளம் | |
www |
தனிப்பட்ட வாழ்க்கை
1949 மார்ச்சு 6 ம் தேதி எர்ணாகுளத்தில் அம்பாட் சுலோச்சனா மற்றும் பேராசிரியர் கே. பாக்யநாத் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் அம்பாட் சிவராம மேனனின் பேரன் ஆவார். 1973 ல், பூனா திரைப்பட நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்து அதில் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
மதுவின் தந்தை, கே. பாக்யநாத் ஆங்கிலப் பேராசிரியரும் ஒரு மாஜிக் கலைஞரும். ஒரு தன்னார்வப் புகைப்படக் கலைஞரும் ஆவார். மது இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், அதே நேரத்தில் புனே திரைப்பட நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உறவினர்களிடமிருந்து எல்லா தடைகளும் இருந்தபோதிலும், மதுவின் பெற்றோர் அவரை திரைப்பட நிறுவனத்தில் சேர அனுமதியளித்தனர், மேலும் அவர் தனது பெற்றோரின் நம்பிக்கையை அந்த நிறுவனத்தில் தங்க பதக்கம் வென்றதன் மூலம் தக்க வைத்துக் கொண்டார். இவை அனைத்தும் மது ஒளிப்பதிவாளராக உதவியது. பிரபல இயக்குனரான ராமு கரியத்தின் ஆவணப்படத்துடன் தனது வாழ்க்கையைத் துவக்கிய மது, 120 க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். புகழ்பெற்ற நடிகையும், நடன கலைஞரானமான விதுபுலா அவரது இளைய சகோதரிஆவார் .
தொழில்
பூனா திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1973 ஆம் ஆண்டில் நடிகர் ராமு கரியத்தின் ஆவணப்படம் ஒன்றை படமெடுத்தார். 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தொழில் வாழ்க்கையில், அவர் பல விருதுகளை வென்ற, பல குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களுக்கான ஒளிப்பதிவாளர் ஆவார். அம்பாட், "ஃபண்டாஷியா மையம் என்ற திரைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்" என்ற ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் தலைமை வகித்தார். புதிதாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் திரைத்துறையில் ஆராய்ச்சிக்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதோடு, திரைப்படக் கலாசாரத்தைப் பரப்பவும் முயல்கிறது. 2003 ஆம் ஆண்டில், அவர் 1: 1.6 ஓடே டு லாஸ்ட் லவ், படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.[2][3][4][5]
விருதுகள்
- 1984: சிறந்த ஒளிப்பதிவு - ஆதி சங்கராச்சாரி (சமஸ்கிருதம்)
- 2006: சிறந்த ஒளிப்பதிவு - சிருங்காரம் (தமிழ்)
- 2010: சிறந்த ஒளிப்பதிவு - ஆதமிண்டெ மகன் அபு (மலையாளம்) [6]
- கேரள மாநில திரைப்பட விருதுகள்
- 1978: அஸ்வத்தாமா , சூர்யண்டே மரணம் மற்றும் யாரோ ஓரல்
- 1987: புருஷார்தம் , சுவாதி திருநாள்
- 1990: அமரம்
- 2018: பாணி , மற்றும் ஆஸ்கார் கோஸ் டூ
- 2002: ஹிருதயாஞ்சலி
- 2012: சிறந்த ஒளிப்பதிவாளர் SIIMA விருது - மகரமஞ்சு
- ஆசியத் திரைப்பட விருதுகள்
- 2012: சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆதமிண்டெ மகன் அபு
- 2013 - ஆசியாவிஷன் விருதுகள் - சிறந்த ஒளிப்பதிவாளர் [7]
குறிப்புகள்
- ↑ மது அம்பத்தோடு வீடியோ நேர்காணல், webindia123.com, http://video.webindia123.com/new/interviews/cinematographers/madhuambat/part1/index.htm பரணிடப்பட்டது 2011-10-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ""1: 1.6 லவ் லாஸ்ட் ஆப் ஓட்"" இம் மூலத்தில் இருந்து 2019-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190118143456/http://odetolostlove.com/.
- ↑ "மடு அம்பத் இயக்குனராகிறார்"
- ↑ "1:16 ஒரு காதலியை இழக்க (மது அம்பத் / 2003/100 நிமிடங்கள் / ஹிந்தி / சமூக)"
- ↑ Narasimham, M. L. (2 June 2003). "A dream come true". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030610173433/http://thehindu.com/thehindu/mp/2003/06/02/stories/2003060201130300.htm. பார்த்த நாள்: 29 November 2018.
- ↑ "தெற்கு சினிமா தேசிய விருதுகளை வென்றது" . தி இந்து 19 மே 2011. பெறப்பட்டது 19 மே 2011
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304060116/http://www.emirates247.com/entertainment/mammotty-kavya-madhavan-bag-asiavision-awards-2013-11-05-1.526962. பார்த்த நாள்: 2016-02-17.