போக்கிரி (திரைப்படம்)

போக்கிரி (Pokkiri) 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினைப் பிரபுதேவா இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஜய், அசின் , பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது. இப்படம் 2005-ல் வெளியான திருப்பாச்சி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தபடம் இவரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகன் தனது திறமையை வெளிப்படுத்தியது போல வடிவேலு தனது நகைச்சுவை நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது மேலும் இப்படத்திற்கு சிறப்பாக அமைந்தது.

போக்கிரி
இயக்கம்பிரபுதேவா
தயாரிப்புஎஸ்.சத்யமூர்த்தி
கதைபூரி ஜெகந்நாத்
இசைமணி சர்மா
நடிப்புவிஜய்
அசின்
பிரகாஷ் ராஜ்
நெப்போலியன்
நாசர்
வடிவேலு
முமைத் கான்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
சண்டைப் பயிற்சிபெப்சி விஜயன்
விநியோகம்கனகரத்னா மூவிஸ்
வெளியீடு2007
ஓட்டம்170 mins
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்75 கோடி[1]

கதை

வார்ப்புரு:Spoiler விஜய்யின் பற்றிக் கேள்விப்பட்டு ஊரின் பிரபல தாதாவான வின்சென்ட் அசோகன் விஜயைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார். இவர்களது எதிர் கும்பலான ஆனந்தராஜ் ஆட்கள் விஜய்யுடன் மோத - அடுக்கடுக்காய் அவர்களை கொலை செய்கின்றார். ஒரு கட்டத்தில் வின்சென்ட் கொல்லப்பட - அவரது தலைவரான பிரகாஷ்ராஜ் இந்தியா வருகிறார். வந்தவர் ஆனந்த்ராஜை கொன்றது மட்டுமல்லாது மத்திய மந்திரியையும் கொல்லத் திட்டம் தீட்டுகிறார். இதனை அறியும் போலீஸ் கமிஷனர் நெப்போலியன் பிரகாஷ்ராஜை தந்திரமாகக் கைது செய்கிறார். தங்கள் தலைவனை விடுவிக்க நெப்போலியன் மகளைக் கடத்துகிறது பிரகாஷ்ராஜின் கும்பல். தன் மகளுக்காக பிரகாஷ்ராஜை விடுதலை செய்கின்றார் நெப்போலியன் இதன போது தங்கள் ஆட்களுக்குள் பொலிஸ் உளவாளி இருப்பதாக பிரகாஷ் ராஜ் அறிந்து கொள்ள கதை முடிவை நோக்கி செல்கின்றது

நடிகர்கள்

நடிகர்கள் பாத்திரம்
விஜய் தமிழ்
அசின் சுருதி
பிரகாஷ் ராஜ் அலி பாய்
மகேஷ் திவாரி கோவிந்தன்
நாசர் சண்முகவேலு
வடிவேலு குங்பூ மாஸ்டர்
நெப்போலியன் முகைதீன் கான்
வின்சென்ட் அசோகன் குரு

பாடல்

இப் படத்திற்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார்.

பாடல் பாடியவர்கள்:
டோலு டோலு ரன்ஜீத், சுசீத்திரா
ஆடுங்கடா என்ன சுத்தி நவீன்
நீ முத்தம் ஒன்று ரன்ஜீத், சுவேதா
மாம்பழமாம் மாம்பழமாம் சங்கர் மகாதேவன், கங்கா
என் செல்லப்பேரு ஆபில் A. V. ரமணன், சுசீத்திரா
வசந்த முல்லை ராகுல் நம்பியார், கிருஷ்ணமூர்த்தி

துணுக்குகள்

  • இத்திரைப்படம் நடன இயக்குனர்,நடிகர் பிரபுதேவா இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாகும்.
  • விஜய் காவல்துறையாளராக நடிக்கும் முதலாவது திரைப்படமாகும்.
  • இத்திரைப்படம் மகேஷ்பாபு,இலியானா நடித்த தெலுங்கு படத்தின் மீளுருவாக்கமாகும் (remake).

வெளி இணைப்புக்கள்

வார்ப்புரு:பிரபுதேவா திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=போக்கிரி_(திரைப்படம்)&oldid=36041" இருந்து மீள்விக்கப்பட்டது