பெற்ற மகனை விற்ற அன்னை

பெற்ற மகனை விற்ற அன்னை, 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ராமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், மாஸ்டர் கோபால், சி. ஆர். விஜயகுமாரி, பண்டரிபாய் டி. பி. முத்துலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3]

பெற்ற மகனை விற்ற அன்னை
இயக்கம்வி. ராமநாதன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைஏ. பி. நாகராஜன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
மாஸ்டர் கோபால்
மனோகர்
சகாதேவன்
விஜயகுமாரி
பண்டரிபாய்
முத்துலட்சுமி
பேபி சசிகலா
ஹெலன்
ஒளிப்பதிவுஇ. என். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புஎல். பாலு
விநியோகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடுமே 30, 1958 [1]
ஓட்டம்.
நீளம்16185 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள் இரட்டையர் விஸ்வநாதன் - இராமமூர்த்தி. தஞ்சை இராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அ. மருதகாசி, எஸ். டி. சுந்தரம் ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தார்கள். திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. எம். ராஜா, எஸ். சி. கிருஷ்ணன், பி. லீலா, ஜிக்கி, கே. ஜமுனாராணி, பி. சுசீலா, டி. எஸ். பகவதி, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடியிருந்தார்கள்.[4]

காலமெனும் காட்டாறு என்ற பாடல் எஸ். டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு என்ற மேடை நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டது.[5]

எண் பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 எதிரிக்கு எதிரி சாட்டையடி கே. ஜமுனாராணி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 03:15
2 அழாதே பாப்பா அழாதே டி. எஸ். பகவதி 03:42
3 லைலா லைலா .. உருளுது பெரளுது ஜிக்கி & கே. ஜமுனாராணி 04:02
4 டில் ரப்ஸா டியோ டியோ எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. ஜி. ரத்னமாலா தஞ்சை இராமையா தாஸ் 01:29
5 கோணாத மரத்திலே …. ஒண்ணே ஒண்ணு அது திருச்சி லோகநாதன், ஜிக்கி, பி. சுசீலா & சீர்காழி கோவிந்தராஜன் 04:36
6 'ஆம்பள்கி கண் போட்டா… கும் கும் கும் திருச்சி லோகநாதன் & ஜிக்கி 03:44
7 பச்சையிலும் நீயும் பச்சை சீர்காழி கோவிந்தராஜன் & ஜிக்கி 03:12
8 தென்றல் உறங்கிய போதும் ஏ. எம். ராஜா & பி. சுசீலா அ. மருதகாசி 04:09
9 கண்ணாளன் வந்திடுவார் ஜிக்கி 03:27
10 பெற்ற மகனை விற்ற அன்னை சீர்காழி கோவிந்தராஜன்
11 மாமா மாமா பன்னாடை ஜிக்கி 03:16
12 காலமெனும் காட்டாறு டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா எஸ். டி. சுந்தரம் 03:33
13 துயர் சூழ்ந்த வாழ்வினிலே கே. ஜமுனாராணி

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2020-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200125032504/http://www.lakshmansruthi.com/cineprofiles/1958-cinedetails27.asp. பார்த்த நாள்: 2017-03-30. 
  2. "petra maganai vitra annai". spicyonion. http://spicyonion.com/movie/petra-maganai-vitra-annai/. பார்த்த நாள்: 2016-02-16. 
  3. "petra maganai vitra annai movie cast crew". gomolo இம் மூலத்தில் இருந்து 2016-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160308055044/http://www.gomolo.com/petra-maganai-vitra-annai-movie-cast-crew/9268. பார்த்த நாள்: 2016-02-16. 
  4. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 153. 
  5. கவியின் கனவு. விக்னேஸ் பதிப்பகம், நுங்கம்பாக்கம், சென்னை 600034. 2005. பக். 9 & 45. 
"https://tamilar.wiki/index.php?title=பெற்ற_மகனை_விற்ற_அன்னை&oldid=35900" இருந்து மீள்விக்கப்பட்டது