பெரும்பற்றப்புலியூர் நம்பி

பெரும்பற்றப்புலியூர் நம்பி[1] என்பவர் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் எனும் சைவ நூலை இயற்றிய ஆசிரியராவார். இவர் பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் புலவர்.[2] இந்நூலே திருவிளையாடற் புராணத்தின் முதல் நூலாகும்.

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

உத்தரமகாபுராணம் எனும் வடமொழியில் சிவபெருமானைப் பற்றிய கதைகள் கூறப்பட்டிருந்தன. அவற்றில் சாரசமுச்சயம் எனும் பகுதியிலிருந்து 64 திருவிளையாடல்களை தமிழுக்குத் தந்தார் பெரும்பற்றப்புலியூர் நம்பி.

சிறப்பு

இவருடைய புராணக் கதைகளில் சில கலித்தொகை, பரிபாடல் முதலான நூல்களிலும் காணப்படுகின்றன. ஆழ்வார்களும், நாயன்மார்களும் கூடப் புராணக் கதைகளைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அவற்றில் கதைத் துணுக்கிகளே உள்ளன. இந்தப் பெருபற்றப்புலியூர் நம்பிதான் முதன்முதலாகப் பல கதைகளின் தொகுப்பாகப் 'புராணம்' என்னும் நூலை உருவாக்கினார். மாபுராணம், பூதபுராணம் என்னும் பெயரில் இடைச்சங்க காடத்து நூல்களாகக் காட்டப்பட்டுள்ள நூல்கள் இலக்கண நூல்கள்.

இந்த நம்பியின் ஊரான பெரும்பற்றப்புலியூர் செல்லிநாட்டில் இருந்தது. இது சங்ககாலத்துச் செல்லூர்.

நம்பி

இவருக்கு முன்னர் நம்பி என்னும் பெயர் கொண்ட சிலர் இருந்தனர்.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 186. 
  2. திருப்புத்தூர்ச் சிவாலயத்தின் தெற்கு மதிலில் உள்ள கல்வெட்டு ஒன்று 1267 ஆம் ஆண்டு அரியணை ஏறிய மாறவர்மன் குலசேகர பாண்டியனில் 16 ஆட்சி ஆண்டினது. இவ்வூர்க் கோயில் அர்ச்சகன் 'பெரும்பற்றப்புலியூர் நம்பி' என்பவனுக்கு இந்தப் பாண்டியன் நிலம் அளித்த செய்தி இந்தக் கல்வெட்டில் உள்ளது. இந்த நம்பி நம்பி திருவிளையாடல் எனப் போற்றப்படும் சிவனது கதைகளைத் தொகுத்துப் புராணமாகப் பாடியவர்.
  3. சகம் 1150
  4. கன்னலும் செந்நெலும் சூழ் செல்லிநாடன் கவுணியன் கொன்
    நன்னர்கள் எண்ணிய ஆனந்தத் தாண்டவ நம்பி கற்பாள்
    தென்னவர் போற்றிய அங்கயற்கண் அம்மை செல்வி திருச்
    சன்னிதிக் கோபுரம் கட்டினான் தன்மம் தழைக்க என்றே. (பழைய தனிப்பாடல்)