பெருங்குன்றூர் கிழார் பாட்டியல்

பாட்டியல் இலக்கணம் கூறும் நூல்களில் ஒன்று பெருங்குன்றூர் கிழார் பாட்டியல். [1] இந்தப் பெருங்குன்றூர்க் கிழார் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இலக்கணப் புலவர். [2] இந்த நூலிலிருந்து தொகுக்கப்பட்ட பாடல்கள் 20 பன்னிரு பாட்டியல் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெருங்குன்றூர் கிழார் பாட்டியல் நூலில் பெரும்பான்மை நூற்பாக்கள் புறத்துறைப் பாடல்களுக்கு இலக்கணம் கூறுகின்றன.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 236. 
  2. சங்க கால இலக்கியப் புலவர்களில் ஒருவரான பெருங்குன்றூர் கிழார் வேறு