பெயர் (இலக்கணம்)

எழுத்திலக்கணத்தின் கூறுகளாக எழுத்தியலில் கூறப்பட்டுள்ள பெயருக்கு, நன்னூல் இலக்கணம் வகுத்துள்ளது.

இடுகுறிப்பெயர் [1], காரணப்பெயர் [2] ஆகிய இரண்டும் பொதுப்பெயராகவும் சிறப்புப்பெயராகவும் வரும்.[3]

இவ்விரு பெயர்களும் பொதுப்பெயர் , சிறப்புப்பெயர் என்று மேலும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன். அவை,

  1. இடுகுறிப் பொதுப்பெயர் - மரம், பழம் முதலியன்
  2. இடுகுறிச் சிறப்புப்பெயர் - மாமரம், ஆரஞ்சுப் பழம் முதலியன்
  3. காரணப் பொதுப்பெயர் - அணிகலன், புலவன் போன்றவை
  4. காரணச் சிறப்புப் பெயர் - நெத்திச்சுட்டி, பாரதி போன்றவை.

எழுத்துகளின் பெயர்

கரம் முதல் ஓளகாரம் வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் என்றும், க் முதல் ன் வரையுள்ள பதினெட்டு எழுத்துகளும் மெய் என்றும் பெயர் பெறும், என்று நன்னூல் எழுத்துகளுக்குப் பெயரிட்டு அழைக்கிறது.[4]

குறில்

உயிர் எழுத்துகளுள் ,,,, என்னும் ஐந்து எழுத்துகளும் குறில் எனப்பெயர் பெறும்.[5]

நெடில்

, , , , , , என்ற ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் எனப்பெயர் பெறும்.[6]

சுட்டு

அ, இ, உ என்னும் மூன்று எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வந்து சுட்டுப் பொருளை உணர்த்துவதால் அவை சுட்டெழுத்துகள் எனப் பெயரிடப்பட்டன.[7]

வினா

எ,யா என்னும் இரண்டெழுத்துகளும் மொழிக்கு முதலிலும் ஆ, ஓ என்னும் எழுத்துகள் இரண்டும் மொழிக்கு இறுதியிலும் ஏ என்னும் எழுத்து மொழிக்கு முதல் மற்றும் இறுதி ஆகிய இரண்டு இடங்களிலும் வினாப் பொருளை உணர்த்தி வருமென்பதால் அவை வினா எழுத்துகள் எனப் பெயர் பெற்றன.[8]

அடிக்குறிப்புகள்

  1. இடுகுறிப்பெயர் என்பது காரணம் ஏதுமின்றி ஒரு பொருளுக்கு இதுதான் பெயர் எனப் பெயரிட்டு வழங்கும் பெயராகும்.
  2. ஏதாவதொரு காரணம் கருதி ஒரு பொருளுக்கு அக்காரணத்தைச் சுட்டி வைக்கப்படும் பெயர் காரணப்பெயராகும்
  3. இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின - நன்னூல் 62
  4. அம்முதல் ஈராறு ஆவி கம்முதல்
    மெய்ம்மூ வாறுஎன விளம்பினர் புலவர்.- நன்னூல் 63
  5. அவற்றுள்
    அஇ உஎ ஒக்குறில் ஐந்தே. - நன்னூல் 64
  6. ஆஈ ஊஏஐ ஓஒள நெடில் - நன்னூல் 65
  7. அ இ உ முதல் தனிவரின் சுட்டே
  8. எயா முதலும் ஆஓ ஈற்றும்
    ஏஇரு வழியும் வினாவா கும்மே - நன்னூல் 67

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பெயர்_(இலக்கணம்)&oldid=20182" இருந்து மீள்விக்கப்பட்டது