பிருதிவிராஜன்
பிருதிவிராஜன் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பிருதிவிராஜன் | |
---|---|
இயக்கம் | பி. சம்பத்குமார் |
தயாரிப்பு | குமார் பிக்சர்ஸ், ஹரன் டாக்கீசு |
கதை | பி. சம்பத்குமார் |
இசை | ஏ. நடராஜன் ஜி. ராமனாதன் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா என். எஸ். கிருஷ்ணன் காளி என். ரத்தினம் டி. எஸ். பாலையா டி.கே.சம்பங்கி எம். ஆர். சந்தானலட்சுமி ஏ. சகுந்தலா டி. ஏ. மதுரம் பி. எஸ். ஞானம் |
பாடலாசிரியர் | எஸ். வேலுசாமி கவி |
கலையகம் | சென்ட்ரல் ஸ்டூடியோ |
வெளியீடு | ஏப்ரல் 29, 1942 |
நீளம் | 17260 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தில்லி அரசர் பிருதிவிராஜனும் (பி. யு. சின்னப்பா), கனோஜ் மன்னர் ஜெயசந்தரும் (டி. எம். ராமசாமிப் பிள்ளை) முகம்மது கோரியுடன் (டி. கே. சம்பங்கி) போர் புரிந்து வெற்றி மாலை சூட்டி, தில்லி தர்பாரில் உரையாடிக் கொண்டிருக்கும் சமயம், சித்தூர் மன்னர் சமரசிங்கர் (ஜி. எம். பசீர்) முகம்மது கோரியை தில்லி தர்பாருக்கு விருந்தினராக அழைத்து வருகிறார். பிருதிவி முகம்மது கோரியை தக்க மரியாதையுடன் அவர் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அப்படியிருக்க பிருதிவியின் பாட்டனாகிய அஜ்மீர் கிழட்டரசர் நந்தபாலன் (எஸ். வேலுசாமி கவி) தான் மரணப் படுக்கையிலிருப்பதாக செய்தி அனுப்ப, பிருதிவியும் ஜெயசந்தரும் அஜ்மீர் போக, நந்தபாலர் தன் நாட்டை பிருதிவிக்கு ஒப்படைக்கிறார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஜெயசந்தரின் மந்திரி ஜாலவர்மன் (டி. எஸ். பாலையா) மனதை மாற்றி பிருதிவிக்கும் ஜெயசந்தருக்கும் விரோதத்தை உண்டாக்கி விடுகிறான். பிருதிவிக்கு ஒரு கடினமான கடிதத்தை ஜெயசந்தர் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையிலிருக்கும் சமயம் தில்லி அரசவைக் கவியாகிய சந்தகவி (எஸ். டி. சுப்பையா) வந்து பிருதிவியின் மனதை மாற்றி, அங்குள்ள சித்திரங்களின் அழகில் ஈடுபடும்படியாக செய்கிறார். ஜெயசந்திரன் மகளான சம்யுக்தையின் (ஏ. சகுந்தலா) உருவத்தை பிருதிவி பார்த்து சம்யுக்தையின் மேல் காதல் கொள்கிறார்.[2]
பிருதிவி தன் காதலை சம்யுக்தைக்குத் தெரிவிக்கும் பொருட்டு தன்னுடைய வளர்ப்புத் தாயார் மாதா தேவியாரை (எம். ஆர். சந்தானலட்சுமி) கனோஜுக்கு அனுப்புகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள். ஆனால் ஜாலவர்மன் பிருதிவியைப்போல் ஒரு சிலையைத் தயார் செய்து, ஒரு சுயம்வரத்தை சம்யுக்தைக்கு ஏற்படுத்தி மண்டபத்தின் வாயிலில் வைக்கிறான். இச் செய்தியை மாதா தேவி மூலமாய் அறிந்த பிருதிவி சுயம்வர நாளன்று சம்யுக்தையைத் தூக்கிச் செல்கிறான், அவமானம் சகிக்கமாட்டாமல் ஜெயசந்தர், முகம்மது கோரியின் உதவியைக்கொண்டு பிருதிவி மேல் போரை ஆரம்பித்தான். போர் நடக்கின்றது.[2]
நடிகர்கள்
நடிகர் | பாத்திரம் |
---|---|
பி. யு. சின்னப்பா | பிருதிவிராஜன் |
டி. எம். ராமசாமிப் பிள்ளை | ஜெய்சந்தர் |
டி. எஸ். பாலையா | ஜாலவர்மன் |
பி. பி. ராமலிங்கம் | மதிவாணர் |
ஜி. எம். பசீர் | சமர்சிங் |
எஸ். டி. சுப்பையா | சந்தகவி |
எஸ். வேலுசாமி கவி | நந்தபாலர் |
எஸ். நாராயணசாமி | அமர்நாத் |
என். எஸ். கிருஷ்ணன் | சாரிவாகன் |
காளி என். ரத்தினம் | பீதாம்பரம் |
டி. ஆர். பி. ராவ் | பீம்சிங் |
டி. கே. சம்பங்கி | முகம்மது கோரி |
ஆர். தேவராஜ் | கமாஸ் |
நடிகை | பாத்திரம் |
---|---|
எம். ஆர். சந்தானலட்சுமி | மாதா தேவி |
ஏ. சகுந்தலா | சம்யுக்தை |
கே. கே. கிருஷ்ணவேணி | ரசிகா |
டி. ஏ. மதுரம் | குமுதம் |
சி. டி. ராஜகாந்தம் | அன்னம் |
பி. எஸ். ஞானம் | கனகாம்பரம் |
பாடல்கள்
பாடல்களை எஸ். வேலுசாமி கவி எழுத, ஏ. நடராஜன், ஜி. ராமநாதன் ஆகியோர் இசையமைத்திருந்தனர். பாரதியாரின் பாடல்களும் சேர்க்கப்பட்டிருந்தன.[2]
எண் | பாடல் | பாடியோர் | இராகம்-தாளம் |
---|---|---|---|
1 | பதறி வருகுதுறுகு தென்னாலி | நடனம் | காம்போதி |
2 | மாதென துள மகிழ்ந்தேனே | என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் | - |
3 | பாரத சமுதாயம் வாழ்கவே | பி. யு. சின்னப்பா | அடானா-திச்ரஏகம்-பாரதி பாடல் |
4 | பேரானந்தமே இன்பம் தரும் நேரமே | ஏ. சகுந்தலா | சிந்துபைரவி-ஆதி |
5 | உண்மையின் ஜோதியைக் கண்டறியாமலே | எஸ். வேலுசாமி கவி | ஆதி |
6 | ஜோடி நாமே இரு பேருமே | நகைச்சுவை நடனம் | - |
7 | தேவதா ஜெகன் மாதா - அம்பா | எம். ஆர். சந்தானலட்சுமி | சுத்தசாவேரி-ஆதி |
8 | மகமாயி அருளாலே குறி சொல்லுவேனே | எம். ஆர். சந்தானலட்சுமி | - |
9 | எவ்விதம் நான் மறப்பேன் - என் வாழ்வில் | பி. யு. சின்னப்பா | சிந்துபைரவி-ஆதி |
10 | நான் மறவே மாரா | ஏ. சகுந்தலா, பி. யு. சின்னப்பா | பாகேசுவரி-ஆதி |
11 | நினைவெல்லாம் பகற் கனவாமோ | ஏ. சகுந்தலா | பாகேசுவரி-ஆதி |
12 | தூது சொல்வாய் கிளியே - நீயே | பி. யு. சின்னப்பா | பியாக்-ஆதி |
13 | நினைச்சது போலே இப்போ முடிச்சதனாலே | காளி என். ரத்தினம், பி. எஸ். ஞானம் | - |
14 | காதல் மேவி என்னாளுமே | ஏ. சகுந்தலா, பி. யு. சின்னப்பா | - |
15 | சந்தோஷமாய் நாமே எப்போதுமிருப்போமே | காளி என். ரத்தினம், பி. எஸ். ஞானம், சி. டி. ராஜகாந்தம் | - |
16 | உலகமே மாயா மோக சொரூபம் | வேலுசாமி கவி, கே. கே. கிருஷ்ணவேணி | காபி-ஆதி |
17 | மானிட வாழ்வினில் காதலே ஜீவன் | - | - |
18 | கானல் நீர் தம் ஓடை | பி. யு. சின்னப்பா | - |
19 | வெற்றி எட்டுத் திக்கும் எட்டு | பி. யு. சின்னப்பா | பாரதி பாடல் |
20 | அச்சமில்லை அச்சமில்லை | ஜி. எம். பசீர் | இராகமாலிகை-ஏகம்-பாரதி பாடல் |
21 | தீர்ந்ததே காதல் வாழ்வு | வேலுசாமி கவி | - |
தயாரிப்பு
இது ஒரு வரலாற்றுத் திரைப்படமாக இருந்தாலும், சுப்பிரமணிய பாரதியின் முன்று பாடல்கள் சேர்க்கப்பட்டிருந்தன. கதாநாயகன் பி. யு. சின்னப்பா இப்பாடல்களைப் பாடினார்.[2] பாரதியாரின் பாடல்கள் அக்காலத்தில் பிரித்தானிய அரசால் தடை செய்யப்பட்டிருந்ததால், அவரது பெயர் திரையில் காட்டப்படவில்லை.[1]
இதே கதை 1962 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர், பத்மினி ஆகியோரின் நடிப்பில் ராணி சம்யுக்தா என்ற பெயரில் எடுக்கப்பட்டது.[3]
வரவேற்பு
இத்திரைப்படம் பெரு வெற்றி பெறவில்லை. ஆனாலும், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், காளி என். ரத்னம், சி. டி. ராஜகாந்தம் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள், மற்றும் பி. யு. சின்னப்பாவின் பாடல்களும் இசையமைப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றன.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 ராண்டார் கை. "Prithvirajan (1942)". தி இந்து. Archived from the original on 5 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2014.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|4=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 பிருதிவிராஜன் பாட்டுப் புத்தகம். 1942.
- ↑ Guy, Randor (19 September 2015). "Rani Samyuktha (1962)". தி இந்து. Archived from the original on 4 April 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.