பிரம கீதை
பிரமகீதை என்பது தத்துவராயர் பாடிய நூல்களில் ஒன்று.
காலம் 15-ஆம் நூற்றாண்டு
- அருச்சுணனுக்குக் கண்ணன் தன் பெருமைகளைச் சொல்வதாக அமைந்துள்ளது பகவத் கீதை.
- வானவர்களெல்லாம் பிரமாவை வணங்கி வேதத்தின் உட்பொருளைக் கூறவேண்டும் என்று கேட்கப், பிரமன் உபநிடதங்களின் பொருளையெல்லாம் சுருக்கி அவற்றின் சாரமாகசு சொன்னதாக அமைந்துள்ளது பிரமகீதை. இது வடமொழியில் உள்ளது.
- தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
- தத்துவராயர் வடமொழிப் பிரமகீதையைத் தமிழில் பாடியுள்ளார். இவர் இந்த நூலுக்குத் தன் ஆசிரியர் நினைவாகச் ‘சொரூபானந்த சித்தி’ என்னும் பெயரை மறுபெயராகச் சூட்டியுள்ளார். இவர் இயற்றிய ஈசுர கீதை நூலுக்கு இவரது ஆசிரியர் அவரது ஆசிரியர் நினைவாகச் ‘சிவப்பிரகாசம்’ எனப் பெயர் சூட்டி மாணாக்கர் நூலைப் பாராட்டியது போன்றது இது
இந்நூலுக்கு உரிய மூலச் சுவடி தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. சான்று:சுவடி எண்: 303
தமிழ்நூல் பிரமகீதை
- இது 12 தலைப்புகளைக் கொண்டது. 547 பாடல்கள் உள்ளன.
- நூல் நல்ல தமிழில் உள்ளது
- மடக்கு அணிப் பாடல்கள் விரவி வருகின்றன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005