பாலைவனச் சோலை (2009 திரைப்படம்)

பாலைவனச் சோலை என்பது 2009 இல் வெளியான ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும். இதில் நிதின் சத்யா, கார்த்திகா மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] இது இதே பெயரில் 1980 இல் வெளியான படத்தின் மறுஆக்கம் ஆகும். படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மேலும் அசல் படத்தின் வெற்றியை இதுவும் பெறத் தவறியது.[2]

பாலைவனச் சோலை
இயக்கம்ஆர். எஸ். தயாளன்
கதைஇராஜசேகர்
இசைஇ. கே. பாபி
நடிப்புநிதின் சத்யா
கார்த்திகா மேத்யூ
சஞ்சீவ்
அபிநய்
சத்தியன்
சாம்ஸ்
ஒளிப்பதிவுஎஸ். மூர்த்தி
கலையகம்மாருதி பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 7, 2009 (2009-11-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2 கோடி

கதை

ரமணா ( சஞ்சீவ் ), யுவன் (அபிநய்), ஆதி (சத்யன்), பிரபு (நிதின் சத்யா), இனியன் ( சாம்ஸ் ) ஒரே பகுதியில் வாழும் நண்பர்கள். யுவன் கெட்டுப்போனவன், ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன். ரமணா ஒரு அக்கறையுள்ள சகோதரன். அவன் கடினமாக உழைத்து தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளான். இனியன் (சாம்ஸ்) போராடிக்கொண்டிருக்கும் வழக்கறிஞர். ஆதி திரையுலகில் சாதிக்க விரும்புவன். பிரபு கலகலப்பான இளைஞன், அவன் ஒரு தானி ஓட்டுநராக உள்ளான்.

பிரியா (கார்த்திகா) அவர்களின் பகுதிக்கு குடிவந்தவுடன் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. பிரியா அவர்களுடன் நன்கு பழகுகிறாள். அவர்களின் தாழ்வு மனப்பான்மையை சமாளிக்கவும், அவர்களின் வாழ்க்கையில் வெற்றிபெறவும் அவள் உதவுகிறாள். இதற்கிடையில், ஆதி அவளிடம் காதலை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் பிரியா மரணத்தின் விளிம்பில் இருப்பதையும், இதய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதையும் அறிந்த நண்பர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.

நடிப்பு

இசை

இப்படத்திற்கு பாபி இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.[3]

வரவேற்பு

இப்படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று,[4][5] வணிக ரீதியாக தோல்வியடைந்தது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்