பாலாஜி மோகன்

பாலாஜி மோகன் (பிறப்பு: 1987 மே 25) ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் 2012ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

பாலாஜி மோகன்
பிறப்பு25 மே 1987 ( 1987 -05-25) (அகவை 37)
திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிஇயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர்
வாழ்க்கைத்
துணை
அருணா

ஆரம்பகால வாழ்க்கை

பாலாஜி மே 25, 1987ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவரது தாய் தமிழ் மற்றும் தந்தை தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள்[1].

தொழில்

இவர் 2009ஆம் ஆண்டு குளிர் 100° என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து இவர் சில குறும் திரைப்படங்களை இயக்கினார். 2010ஆம் ஆண்டு சுதா கே. பிரசாத் இயக்கிய துரோகி என்ற திரைப்படத்திலும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து கோடி, த ஜூனியர்ஸ் , ஆட்டி தில், மிட்டாய் வீடு மற்றும் காதலில் சொதப்புவது எப்படி போன்ற போன்ற 5 குறும் திரைப்படங்களை இயக்கினார். 2012ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அமலா பால் வைத்து காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

திரைப்படங்கள்

குறும்படங்கள்

  • கோடி
  • த ஜூனியர்ஸ்
  • ஆட்டி தில்
  • புதையல்
  • காதலில் சொதப்புவது எப்படி
  • மிட்டாய் வீடு
  • துரும்பிலும் எருபூர் (ஹீரோ)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
2012 காதலில் சொதப்புவது எப்படி தமிழ், தெலுங்கு பரிந்துரை-SIIMA விருது சிறந்த புதுமுக இயக்குனர்.
2014 வாயை மூடி பேசவும் தமிழ், மலையாளம் கவுரவ தோற்றம்: செய்தி வாசிப்பாளர்
2014 சமரசம் ஆரோக்கியத்திற்கு ஹானிகரம் மலையாளம்
2015 மாரி தமிழ்
2018 மாரி 2 தமிழ்
"https://tamilar.wiki/index.php?title=பாலாஜி_மோகன்&oldid=21123" இருந்து மீள்விக்கப்பட்டது