பாலநாகம்மா (1942 திரைப்படம்)
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பால நாகம்மா (தெலுங்கு) கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
பாலநாகம்மா (Bala Nagamma) 1942 இல் வெளியான ஒரு தெலுங்குத் திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குநர் சி. புல்லையா மற்றும் தயாரிப்பாளர் சுப்பிரமணியம் சீனிவாசன் ஆவர். பாலநாகம்மா திரைப்படைக்கதை மிகவும் பிரபலமான புர்ரகதைகளுள் ஒன்றாகும். ஜெமினி ஸ்டியோவால் தயாரிக்கப்பட்டத் துவக்ககால வெற்றிபெற்ற தெலுங்குத் திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. இத்திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[1] இப்படம் தமிழிலில் மறுஆக்கம் செய்யப்படவில்லை. ஆனால் அதே ஜெமினி ஸ்டியோவால் இந்தியில் மதுபாலாவின் நடிப்பில் 1954 இல் மறுஆக்கம் ("பகுத் தின் குவே") செய்யப்பட்டது.[2] இதே திரைப்படம் 1959 ஆம் ஆண்டில் இதே தலைப்பில் வேதாந்த ராகவய்யா இயக்கத்தில் மீண்டும் வெளியானது.
பாலநாகம்மா | |
---|---|
இயக்கம் | சி. புல்லையா |
தயாரிப்பு | சுப்பிரமணியம் சீனிவாசன் |
கதை | பாலிஜெபள்ளி லட்சுமிகாந்தக் கவி |
இசை | எம். டி. பார்த்தசாரதி எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | காஞ்சனமாலா கோவிந்தராஜுலு சுப்பா ராவ் |
ஒளிப்பதிவு | சைலென் போஸ் பி. எஸ். இரங்கா |
படத்தொகுப்பு | சந்துரு என். கே. கோபால் |
கலையகம் | ஜெமினி ஸ்டூடியோஸ் |
விநியோகம் | ஜெமினி ஸ்டூடியோஸ் |
வெளியீடு | 17 திசம்பர் 1942(இந்தியா) |
ஓட்டம் | 220 நிமிடங்கள் |
மொழி | தெலுங்கு |
கதை
இக்கதை, பாலநாகம்மா என்ற இளவரசியைப் பற்றியது. நவபோஜராஜு என்ற அரசரின் மனைவியான ராணி புலலட்சுமி, ஜடாக முனிவரிடம் குழந்தைப்பேறு வேண்டிக்கொள்ள அவரது வாழ்த்துகளினால் அவளுக்கு ஏழு குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றுள் கடைசிக் குழந்தைதான் பாலநாகம்மா (காஞ்சனமாலா). அவளை கார்யவார்தி ராஜு என்பருக்குத் திருமணம் செய்து தருகின்றனர். ஆனால் அவளை மாயால மாரதி (கோவிந்தராஜுலு சுப்பாராவ்) என்பவன் கடத்திச் சென்று நாகுள்ளபுடி காட்டு என்ற இடத்திலுள்ள குகையொன்றில் நாயாக மாற்றி அடைத்துவைத்து விடுகிறான். அங்கு அவன், அவளைக் கட்டாயத் திருமணம் செய்துகொள்ள முயற்சிசெய்ய, அவள் சில விரதங்களும் பூசைகளும் செய்யவேண்டும் எனக்கூறி காலம் கடத்துகிறாள். இவ்வாறாக அக்குகையிலேயே அவள் 14 ஆண்டுகாலம் அடைபட்டுக் கிடக்கிறாள். இச்சமயத்தில் மாயால மாரதியின் மனைவி ராணி சங்கு (புஷ்பவல்லி) பாலநாகம்மாவின் மீது பொறாமை கொள்கிறாள். பாலநாகம்மாவின் மகன் பாலவார்தி ராஜு வளர்ந்தபின் தனது அன்னைக்கு நேர்ந்ததை அறிந்துகொள்கிறான். தனது தாயைக் கடத்தி அடைத்து வைத்திருக்கும் குகைக்குப் பூ விற்கும் தம்பலி பெடி என்ற பென்ணின் பேரனாக நடித்து அங்கு சென்று மாயால மாரதியைத் தோற்கடித்துத் தன் தாயை மீட்கிறான்.
நடிகர்கள்
|
|
வரவேற்பு
திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கையின் கூற்றின்படி இத்திரைப்படம் ₹40 இலட்சம் (US$50,000) இலாபம் ஈட்டியது.[4]
மேற்கோள்கள்
- ↑ "Lyrical details of Bala Nagamma at Ghantasala Galamrutamu". 18 April 2012. https://ghantasalagalamrutamu.blogspot.com/2011/03/1942.html. பார்த்த நாள்: 15 July 2021.
- ↑ Randor Guy (23 May 2003). "With a finger on people's pulse". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 June 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030629133534/http://www.thehindu.com/thehindu/fr/2003/05/23/stories/2003052301510600.htm. பார்த்த நாள்: 3 May 2018.
- ↑ 3.0 3.1 Pullayya, C. (1942). Balanagamma (motion picture) (in తెలుగు). ஜெமினி ஸ்டூடியோஸ். Opening credits, from 0:57 to 1:41.
- ↑ Randor Guy (December 2008). "... And thus he made Chandralekha sixty years ago". Madras Musings XVIII இம் மூலத்தில் இருந்து 24 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130524070957/http://madrasmusings.com/Vol%2018%20No%2017/and_thus_he_made_chandralekha_sixty_years_ago.html.