பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)
பார்த்திபன் கனவு (Parthiban Kanavu) 1960 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு எனும் புதினத்தை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படம் இயக்கப்பட்டது.
பார்த்திபன் கனவு | |
---|---|
இயக்கம் | யோகநாத் |
தயாரிப்பு | கோவிந்தராஜன் ஜுபிலே பிலிம்ஸ் |
கதை | கல்கி கிருஷ்ணமூர்த்தி |
இசை | வேதா |
நடிப்பு | ஜெமினி கணேசன் வைஜயந்திமாலா சரோஜாதேவி எஸ். வி. ரங்கராவ் அசோகன் டி. எஸ். பாலையா எஸ். வி. சுப்பையா மாலதி ராகினி குமாரி கமலா |
வெளியீடு | ஜூன் 3,1960 |
நீளம் | 19783 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளராக இருந்த மணியம் கலை இயக்குநராகப் பணியாற்றினார்.[2]
8ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், பார்த்திபன் கனவு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.[3] இப்படம் 1961 ஆம் ஆண்டில் தெலுங்கில் வீர சாம்ராஜ்யம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[4]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "Tamil Film Parthiban Kanavu Completes 62 Years". 4 June 2022 இம் மூலத்தில் இருந்து 2 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220702062019/https://www.news18.com/news/movies/tamil-film-parthiban-kanavu-completes-62-years-5311993.html.
- ↑ Charukesi (10 November 2011). "Art world's Famous Five". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120915043429/http://www.thehindu.com/arts/art/article2615096.ece.
- ↑ "State Awards for Films". 31 March 1961 இம் மூலத்தில் இருந்து 23 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161123052231/http://iffi.nic.in/Dff2011/Frm8thNFAAward.aspx.
- ↑ "Veera Samrajyam" இம் மூலத்தில் இருந்து 28 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231228103356/https://indiancine.ma/BHWE/info.
வெளி இணைப்புகள்
- பார்த்திபன் கனவு திரைப்படக் காட்சிகள் பரணிடப்பட்டது 2008-10-28 at the வந்தவழி இயந்திரம்