பாடங்கேட்டலின் வரலாறு
பாடங்கேட்டலின் வரலாறு என்பது பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் காணப்படும் பொதுப் பாயிரத்தின் உறுப்புகளில் ஒன்றாகும். இதில் ஏழு நூற்பாக்கள் உள்ளன.
பாடங்கேட்கும் முறை ஒரு நூற்பாவிலும், பாடங்கேட்ட பின்னர் பயிலும் முறை நான்கு நூற்பாக்களிலும், முழுப்புலமை பெறும் முறை ஒரு நூற்பாவிலும், ஆசிரியரை வழிபடும் முறை ஒரு நூற்பாவிலும் கூறப்பட்டுள்ளன.