பாகமதி (Bhaagamathie) ஜி. அசோக் இயக்கத்தில், வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் ஆகியோரின் தயாரிப்பில், அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ், தெலுங்கு இருமொழி திகில் திரைப்படம்.[1][2] இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 206ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2018 இல் திரையரங்குகளில் வெளியானது. ஒரு அரசியல்வாதியின் ஊழலைக் கண்டறிவதின் பொருட்டு, பேய் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் ஒரு பெண்ணைச்சுற்றி நிகழும் கதையே பாகமதி.[3][4]

பாகமதி
இயக்கம்ஜி. அசோக்
தயாரிப்புவி. வம்சி கிருஷ்ணா ரெட்டி
பிரமோத்
கதைஜி. அசோக்
இசைதமன்
நடிப்புஅனுஷ்கா
உன்னி முகுந்தன்
ஜெயராம்
ஆஷா சரத்
ஒளிப்பதிவுஆர். மதி
படத்தொகுப்புகோட்டகிரி வெங்கடேசுவர ராவ்
கலையகம்யுவி கிரியேசன்ஸ்
வெளியீடுசனவரி 26, 2018 (2018-01-26)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
தமிழ்

நடிப்பு

கதை

நாட்டுக்காக நல்லது செய்யும் அமைச்சர் ஒருவரை கடவுளர் சிலைகள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிடுகிறது அரசு.[5] அமைச்சரின் தனிச் செயலாளரான இந்திய ஆட்சிப்பணி அலுவலர் அனுஷ்காவை பாகமதி என்னும் பேய் வீட்டில் சிறையிலடைத்து புலனாய்வு நடத்துகின்றனர்.[6] தொடர்ந்து கொள்ளை போன கடவுள் சிலைகள் கிடைத்ததா? அரசு- அரசியல் சதுரங்கத்தில் அனுஷ்கா என்ன செய்கின்றார்? பாகமதி என்பவர் யார்? என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கின்றது பாகமதி திரைப்படம்.[7]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாகமதி&oldid=35369" இருந்து மீள்விக்கப்பட்டது