பரதன் (இயக்குநர்)
பரதன் (Bharathan) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். திரைப்பட இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்ற ஆரம்பித்ததிலிருந்து இவரது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. இவர், 2001 இல் வெளிவந்த விக்ரமின் தில் மற்றும் தரணி இயக்கிய விஜயின் கில்லி, மதுர ஆகியவற்றுக்கும் இயக்குநர் சிவா இயக்கிய அஜித்தின் வீரம் திரைப்படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.[1][2] விஜயின் நடிப்பில் பரதன் முதலாவதாக இயக்கிய அழகிய தமிழ்மகன் திரைப்படம் வருவாயில் குறைந்த அளவையே பெற்றுக் கொண்டது.[3] இவரது இரண்டாம் திரைப்படமான அத்தி சராசரியான வருவாயைப் பெற்றுக்கொண்டது.[4]விஜயின் அறுபதாவது திரைப்படமான பைரவாவினை இவர் இயக்குகின்றார்.[5]
பரதன் | |
---|---|
பிறப்பு | Bharathan |
செயற்பாட்டுக் காலம் | 2001 – தற்போது |
திரைப்படப்பட்டியல்
ஆண்டு | திரைப்படம் | செயல் | மொழி | குறிப்பு | மேற்கோள் |
---|---|---|---|---|---|
2001 | தில் | எழுதுநர் | தமிழ் | வசனம் | [6] |
2001 | தூள் | எழுதுநர் | தமிழ் | வசனம் | |
2004 | கில்லி | எழுதுநர் | தமிழ் | வசனம் | [7] |
2004 | மதுர | எழுதுநர் | தமிழ் | வசனம் | [8] |
2007 | அழகிய தமிழ்மகன் | இயக்குநர், எழுதுநர் | தமிழ் | [3] | |
2011 | ஒஸ்தி | எழுதுநர் | தமிழ் | வசனம் | |
2014 | வீரம் | எழுதுநர் | தமிழ் | வசனம் | [9] |
2014 | அத்தி | இயக்குநர், எழுதுநர் | தமிழ் | ||
2017 | பைரவா | இயக்குநர், எழுதுநர் | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ http://www.behindwoods.com/தமிழ்-movie-news/apr-07-03/20-04-07-vijay.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://behindwoods.com/தமிழ்-movies-cinema-news-15/vijays-60th-film-will-be-directed-by-bharathan.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 http://www.behindwoods.com/தமிழ்-movie-news/nov-07-02/13-11-07-diwali.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 http://www.deccanchronicle.com/140628/entertainment-movie-review/article/movie-reivew-athithi-has-its-thrilling-moments
- ↑ http://www.ibtimes.co.in/vijay-60-aka-thalapathy-60-title-first-look-posters-be-released-monday-photos-692367
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140409004703/http://www.sify.com/movies/vikram-is-red-hot-in-andhra-news-telugu-kkfvHnjchci.html.
- ↑ http://www.thehindu.com/thehindu/fr/2004/12/31/stories/2004123101620100.htm
- ↑ http://www.indiaglitz.com/box-office-report-தமிழ்-news-10472.html
- ↑ http://www.kollyinsider.com/2014/01/jilla-vs-veeram-10-days-box-office.html