நீலகிரி

நீலகிரி (ஆங்கிலம்:Neelagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இது ஒரு நகரியம் ஆகும்.

நீலகிரி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி நீலகிரி
மக்களவை உறுப்பினர்

ஆ. ராசா

மக்கள் தொகை 11,046 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நீலகிரி பெயர் விளக்கம்

நீலகிரி சங்ககாலத்தில் இரணியமுட்டம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது. கண்டீரம், தோட்டி என்னும் பெயர்களும் சங்ககாலத்தில் அதன் முகடுகளுக்கு வழங்கப்பட்டன.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,046 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நீலகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீலகிரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இயற்கை வளம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீலகிரியின் இயற்கை வளம் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு காலகட்டத்தில் மரங்கள் செறிந்திருந்தன. மரங்கள் குறைந்த அளவே வெட்டப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பின்னர் மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதன் விளைவாக 1978 ஆம் ஆண்டு இறுதியில் நிலச்சரிவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. [5]

இவற்றையும் காணவும்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 341-342


"https://tamilar.wiki/index.php?title=நீலகிரி&oldid=41802" இருந்து மீள்விக்கப்பட்டது