நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதன் கதைக்களம் 1844 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ர் டுமாஸ் எழுதிய தி கோர்சிகன் பிரதர்ஸ் என்ற பிரெஞ்சு புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.[1] இப்படம் இந்தியில் கோர அவுர் காலா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2]

நீரும் நெருப்பும்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புதின்சா கே. தோராணி
மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுஅக்டோபர் 18, 1971
ஓட்டம்.
நீளம்4520 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

தந்தையைக் கொன்ற மார்த்தாண்டனை பழிவாங்கும் இரட்டை இளவரசர்களான மணிவண்ணன், கரிகாலன் ஆகியோர் பற்றிய கதை இது. இரட்டையர்கள் பிரிக்கப்பட்டு வளர்க்கபடுகின்றனர். ஆனால் மணிவண்ணனுக்கு ஏற்படும் அதே உணர்வால் கரிகாலனும் ஆட்படுகிறார். இரட்டையர்களில் ஒருவர் அருணகிரியாலும், மற்றொருவர் மருதுவால் வளர்க்கப்படுகின்றனர். ஒருவர் படித்தவர், மற்றவர் திறமையான போர்வீரர். மார்த்தாண்டனை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு வீழ்த்துகின்றனர்.

நடிகர்கள்

நடிகர் பாத்திரம்
ம. கோ. இராமச்சந்திரன் இரட்டையர்களான இளவரசர்கள் மணிவண்ணன் (நீரும்) மற்றும் கரிகாலன் (நெருப்பும்)
ஜெ. ஜெயலலிதா காஞ்சனா
எஸ். ஏ. அசோகன் மன்னர் மார்த்தான்டன்
இரா. சு. மனோகர் அரசரின் மெய்க்காப்பாளன் மருது
தி. க. பகவதி மருத்துவர் அருணகிரி
சி. எல். ஆனந்தன் ஜம்பு, மார்த்தாண்டனின் வலது கை
விஜயசந்திரிகா
தேங்காய் சீனிவாசன் மார்த்தாண்டனின் ஒப்பனையாளர் நவரசம்
மனோரமா அம்முனி
ஜோதிலட்சுமி மார்த்தாண்டனுக்கு பிடித்த கனகவள்ளி
ஜி. சகுந்தலா ராணி கற்பகம், இரட்டையர்களின் தாய்
சண்முகசுந்தரி இளவரசன் மணிவண்ணனின் வளர்ப்புத் தாய்
எஸ். வி. இராமதாஸ் இரட்டைக் குழந்தைகளின் தந்தை மன்னர் மகேந்திர பூபதி
வி. எஸ். ராகவன் காஞ்சனாவின் தந்தையும், நகை வணிகருமான நல்லா
கே. நடராஜன் இளவரசன் மணிவண்ணனின் வளர்ப்புத் தந்தை
கரிகோல் ராஜு காவலன்
உசிலைமணி காவலன்

இசை

பாடல் பட்டியல்[3]
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "கன்னி ஒருத்தி மடியில்"  வாலிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:27
2. "கடவுள் வாழ்த்துப் பாடும்"  வாலிடி. எம். சௌந்தரராஜன் 3:12
3. "கட்டு மெல்ல கட்டு"  வாலிஎல். ஆர். ஈசுவரி 3:24
4. "கொண்டவா இன்னும்"  வாலிஎஸ். ஜானகி 3:16
5. "மாலை நேரத்தென்றல்"  வாலிபி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:26
6. "விருந்தோ நல்ல விருந்து"  வாலி, வயலார் ராமவர்மா, கோசராஜு, விஜய நரசிம்மாஎல். ஆர். ஈசுவ, கி. வீரமணி, சாதன், நாகேசுவர ராவ், டி. ஏ. மோதி, ஜே. வி. இராகவலு 6:53

தயாரிப்பு

ஜெமினி ஸ்டூடியோவில் உருவான இந்தப் படத்தின் வாள் சண்டை அப்போது பேசப்பட்டது. சண்டைக் காட்சிகளில் ம.கோ.இராவுக்கு டூப்பாக கே. பி. இராமகிருஷ்ணன் நடித்தார்.[4]

வரவேற்பு

இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த பெரும் வெற்றியை ஈட்டவில்லை. ம.கோ.இரா இரட்டையர்களாக நடித்த ஒரு கதாபாத்திரமான கரிகாலன் இறப்பதை இரசிகர்கள் அப்போது ஏற்கவில்லை என்று பேச்சு எழுந்தது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நீரும் நெருப்பும்

"https://tamilar.wiki/index.php?title=நீரும்_நெருப்பும்&oldid=34925" இருந்து மீள்விக்கப்பட்டது