நிவேதா தாமஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிவேதா தாமஸ் (Nivetha Thomas, பிறப்பு: 2 சனவரி 1994) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றார்.
நிவேதா தாமஸ் Nivetha Thomas | |
---|---|
பிறப்பு | 2 சனவரி 1994 |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2003–தற்போது வரை |
திரைப்பட வாழ்க்கை
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003 ஆம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது வென்றார். அதே ஆண்டில் குருவி என்ற தமிழ்த் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார். 2009 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் அரசி என்ற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆனார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2003 | உத்தரா | உத்தரா | மலையாளம் | |
2008 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | நிஷா | மலையாளம் | வெற்றியாளர், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது |
குருவி | வெற்றிவேல் சகோதரி | தமிழ் | ||
2009 | மத்ய வேனல் | மனிகுட்டி | மலையாளம் | |
ராஜாதி ராஜா | பள்ளி மாணவி | தமிழ் | ||
2011 | சாப்பா குரிஷ் | மலையாளம் | ||
ப்ரநயம் | கிரேஸ் | மலையாளம் | ||
போராளி | தமிழ்செல்வி | தமிழ் | ||
2012 | தட்டத்தின் மறையாது | பாத்திமா | மலையாளம் | |
2013 | ரொமன்ஸ் | எலேனா | மலையாளம் | |
நவீன சரஸ்வதி சபதம் | ஜெய்ஸ்ரீ | தமிழ் | ||
2014 | ஜில்லா | மகாலட்சுமி | தமிழ் | |
ஜூலியட் - காதல் உள்ள இடியட் | தெலுங்கு | படபிடிப்பில் | ||
பணம் ரத்னம் | பியா | மலையாளம் | படபிடிப்பில் |
சின்னத்திரைத் தொடர்கள்
ஆண்டு | தொடர்கள் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2001 | ராஜா ராஜேஸ்வரி | நல்லம்மா | தமிழ் | |
2007 | மை டியர் பூதம் | கௌரி | தமிழ் | |
தென்மொழியல் | தமிழ் | |||
2009 | அரசி | காவேரி | தமிழ் | |
2010 | சிவமயம் | பொன்னி | தமிழ் |