நந்தவன தேரு

நந்தவன தேரு 1995 இல் வெளிவந்த 1995 தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார். இப்படத்தில் கார்த்திக் மற்றும் அறிமுக நாயகி ஸ்ரீநிதி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். டி. சிவா மற்றும் ஏ. செல்வராஜ் ஆகியோர் இதனைத் தயாரித்திருந்தனர். இசை இளையராஜா 1995 மே 11 அன்று இப்படம் வெளி வந்தது. இப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை [1][2][3][4]

நந்தவன தேரு
இயக்கம்ஆர். வி. உதயகுமார்
தயாரிப்புடி. சிவா
ஏ. செல்வராஜ்
கதைகோகுல கிருஷ்ணன் (வசனம்)
திரைக்கதைஆர். வி. உதயகுமார்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். கணேஷ்
படத்தொகுப்புபி. எஸ். நாகராஜ்
கலையகம்டி. சிவா, அம்மா கிரியேசன்ஸ்
வெளியீடுமே 11, 1995 (1995-05-11)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

சீனு (கார்த்திக்) அவன் ஒரு அனாதை மற்றும் ஒரு முழுநேர திருடன் . சிறைக்கு வெளியே தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவன் சிறைக் கைதிகளுக்கு உதவுகிறான். ஒரு நாள், கைதி ஒருவன் சோகமாக இருக்கிறான். சீனு அவனது பிரச்சனையைப் பற்றி அவனிடம் கேட்கிறான். காயத்ரி (ஸ்ரீநிதி) என்ற ஒரு பாடகியின் தாய்வழி மாமா ஆதிசேஷன் (தேவன்) அவர் பெரிய செல்வந்தர், காயத்ரியின் மாமா ராஜசேகரன் (ஆனந்த் ராஜ்) மற்றும் அவரது மகன் குணசேகரன் ஆகியோரால் ஆதிசேஷன் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறார். ஆதிசேஷனுக்கு எதிராக காயத்ரியின் மனதில் விஷத்தை தூவுகிறார்கள்.

காயத்ரி வாழ்க்கை பெரும் அபாயகரமானதாக இருப்பதாக ஆதிசேஷன் நம்புகிறார், இதற்காக, சீனுவை காயத்திரியை காப்பாற்றக் கோருகிறார். சீனு அவரது பிரச்சனையை தீர்த்து வைப்பதாக வாக்களிக்கிறான். ஆரம்பத்தில், காயத்ரி சீனுவைத் தவிர்க்கிறார், ஆனால் விரைவில் ராஜசேகரின் உண்மையான முகத்தை அவள் புரிந்துகொள்கிறாள், அவள் சீனுவின் நண்பராகிறாள். பின்னர் காயத்திரியின் வாழ்க்கையில் என்னவாயிற்று?. ஆதிசேஷன் சிறையிலிருந்து மீண்டாரா? ராஜசேகரன் மற்றும் அவரது மகன் குணசேகரன் ஆகிய இருவரும் தண்டிக்கப்படனரா? என்பது படத்தின் மீதிக்கதைச் சொல்கிறது.

நடிகர்கள்

ஒலித்தொகுப்பு

நந்தவன தேரு
ஒலிச்சுவடு
வெளியீடு1995
ஒலிப்பதிவு1995
இசைப் பாணிதிரைப்படப் பாடல்
நீளம்32:31
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா இசைமைத்திருந்தார். 8 பாடல்கள் கொண்ட படத்தின் பாடல்கள் 1995 இல் வெளி வந்தது, ஆர். வி. உதயகுமார் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.[5]

எண் பாடல் பாடியோர் நேரம்
1 "அடிச்சு புடிச்சி" அருண்மொழி, மனோ, எஸ்என். சுரேந்தர் 4:51
2 "அண்ணிய காட்டு அண்ணனே" மனோ, சுவர்ணலதா 4:53
3 "என்ன வரம் வேண்டும்" மனோ, லேகா, சிந்துதேவி 5:29
4 "எந்தன் வாழ்க்கையின்" மனோ 5:19
5 "ரமணா ஸ்ரீ" சோபனா 2:10
6 " உன் முன்னே நான் பாட " அருண்மொழி 1:05
7 "வெள்ளி நிலவே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் 5:10
8 "விரலில் சுருதி மீட்டவா" சித்ரா 3:34

மேற்கோள்கள்

  1. "Find Tamil Movie Nandavana Theru". jointscene.com இம் மூலத்தில் இருந்து 3 March 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110303223826/http://www.jointscene.com/movies/kollywood/Nandavana_Theru/7000. பார்த்த நாள்: 2012-01-03. 
  2. "Nandhavana Theru". popcorn.oneindia.in இம் மூலத்தில் இருந்து 14 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120714211716/http://popcorn.oneindia.in/title/6495/nandhavana-theru.html. பார்த்த நாள்: 2012-01-03. 
  3. "filmography of nandhavana theru". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2013-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130612073606/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nandhavana%20theru. பார்த்த நாள்: 2012-01-03. 
  4. "Tamil Movie News--1995 Review". groups.google.com. 1996-01-09. https://groups.google.com/d/topic/soc.culture.tamil/fwLpyN6aWTk. பார்த்த நாள்: 2012-08-31. 
  5. "Nanthavana Theru — Illayaraja". thiraipaadal.com. http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBIRR00412. பார்த்த நாள்: 2012-01-03. 

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:ஆர். வி. உதயகுமார்

"https://tamilar.wiki/index.php?title=நந்தவன_தேரு&oldid=34504" இருந்து மீள்விக்கப்பட்டது