த. மு. சபாரத்தினம்

தம்பையா முதலியார் சபாரத்தினம் (Thambaiyah Mudaliyar Sabaratnam, 16 சனவரி 1895 - 23 சனவரி 1966) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக 1924 முதல் 1931 வரை வட மாகாணத்தின் கிழக்குப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

ரி. எம். சபாரத்தினம்
T. M. Sabaratnam
இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1924–1931
பின்னவர்பேரா. செ. சுந்தரலிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1895-01-16)16 சனவரி 1895
முல்லைத்தீவு
இறப்பு23 சனவரி 1966(1966-01-23) (அகவை 71)
முல்லைத்தீவு
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
துணைவர்வாலாம்பிகை அழகம்மா
பிள்ளைகள்புலேந்திரா சபாரத்தினம்,
சகுந்தலா நல்லையா
முன்னாள் கல்லூரிகொழும்பு ரோயல் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்

வாழ்க்கைச் சுருக்கம்

ரி. எம். சபாரத்தினம் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் சட்டக் கல்வியை கொழும்பு சட்டக் கல்லூரியில் முடித்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[2] வாலாம்பிகை அழகம்மா என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ராசக்கோன் புலேந்திரா, சகுந்தலா நல்லையா என்ற இரு பிள்ளைகள்.

அரசியல் வாழ்க்கை

1924 தேர்தலில் இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராக வட மாகாணத்தின் கிழக்குப் பகுதிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இப்பதவியை அவர் 1931 ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார். பின்னர் 1947 நாடாளுமன்றத் தேர்தல்[4], மற்றும் 1952 தேர்தல்களில்[5] அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

டி. எம். சபாரத்தினத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1924 சட்டவாக்கப் பேரவை வட மாகாணம் கிழக்கு - தெரிவு
1947 நாடாளுமன்றம்[4] வவுனியா தமிழ் காங்கிரசு தோல்வி
1952 நாடாளுமன்றம்[5] வவுனியா தமிழ் காங்கிரசு தோல்வி

சமூகப் பணி

சபாரத்தினம் இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் நிருவாக உறுப்பினராகவும்[6] பின்னர் வற்றாப்பளை அம்மன் கோவில் அறங்காவல் தலைவராகவும் சேவையாற்றினார்.[7]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Rajasingham, K. T. "SRI LANKA: THE UNTOLD STORY: Chapter 5: Political polarization on communal lines" பரணிடப்பட்டது 2001-10-25 at the வந்தவழி இயந்திரம், ஏசியா டைம்ஸ், செப்டம்பர் 8, 2001
  2. law/nlr/common/html/NLR53V472.htm VELUPILLAI et al v PULENDRA et al[தொடர்பிழந்த இணைப்பு], S. C. 462-D. C. Vavuniya, 831 (law case report)
  3. Sabaratnam, T., Sri Lankan Tamil Struggle, Chapter 19: "The Birth and Death of the Jaffna Youth Congress"
  4. 4.0 4.1 "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115557/http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF. 
  5. 5.0 5.1 "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115603/http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF. 
  6. process.php?chapterid=1956Y10V344C&sectionno=4&title=RAMAKRISHNA%20MISSION%20&path=3 Article 4[தொடர்பிழந்த இணைப்பு], Ramakrishna Mission (Ceylon Branch) Ordinance
  7. வற்றாப்பளை அம்மன் கோவில் வரலாறு
"https://tamilar.wiki/index.php?title=த._மு._சபாரத்தினம்&oldid=24218" இருந்து மீள்விக்கப்பட்டது