தேவதாசி (திரைப்படம்)

தேவதாசி என்பது 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை எம். எல். டாண்டன், டி. வி. சுந்தரம் ஆகியோர் இயக்கினர்.[2] இத்திரைப்படத்தில் கண்ணன், டி. எஸ். துரைராஜ், லீலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[3]

தேவதாசி
இயக்கம்எம். எல். டாண்டன்
டி. வி. சுந்தரம்
தயாரிப்புசுகுமார் பிக்சர்சு, வேப்பேரி, சென்னை
கதைபி. எஸ். ராமையா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புகண்ணன்
டி. எஸ். துரைராஜ்
காளி என். ரத்னம்
லீலா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
அங்கமுத்து
கலையகம்நெப்டியூன்
வெளியீடுசனவரி 15, 1948[1]
ஓட்டம்.
நீளம்16523 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தி இந்து நாளிதழில் வெளியான விமர்சனக் கட்டுரையின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.[3]

தயாரிப்பு

சுகுமார் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை மாணிக் லால் டாண்டன் (எம். எல். டாண்டன்), டி. வி. சுந்தரம் ஆகியோர் இயக்கினர். பிரெஞ்சு மொழி புதினமான தைஸ் என்ற புதினத்தை அடிப்படையாக கொண்ட கதைக்கு பி. எஸ். இராமையா திரைக்கதை, உரையாடல் எழுதினார்.[3] பி. எஸ். ராய் ஒளிப்பதிவு செய்ய, ஆர். ராஜகோபால் படத்தொகுப்பை மேற்கொண்டார். கலை இயக்த்தை கங்காதரன் மற்றும் சண்முகநாதன் செய்திருந்தனர்.[1] இந்தப் படம் நெப்டியூன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.[3] படத்தை எடுத்து முடித்த பின்னர் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நகைச்சுவைக் காட்சி தனியாக எடுக்கபட்டு படத்தில் சேர்க்கப்பட்டது. படம் வெளியான பின்னர் திரையரங்குக்கு சென்று என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் படத்தைப் பார்த்தனர். திரையரங்கில் கூட்டம் இல்லாததைக் கண்டு படத்தயாரிப்பாளரை அழைத்து நான் நடித்தும் படம் சரியாக ஒடவில்லை. இது என் தவறுதான், நீங்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பணத்தைத் திருப்பித் தந்ததாக கூறப்படுகிறது.[4]

பாடல்

இராஜகோபால ஐயர் மற்றும் உடுமலை நாராயண கவி ஆகியோர் பாடல் வரிகளை எழுத, கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[1] என். எஸ். கிருஷ்ணன் தனக்கான பாடலைப் பாட, பின்னணி பாடகி சுந்தரி தம்பி பாடல்களைப் பாடினார்.[3]

  • "பாக்யசாலி நானே" - சுந்தரி தம்பி
  • "புது மலரே" - சுந்தரி தம்பி
  • "இது போல் ஆனந்தமே" - கே.வி.மகாதேவன், சுந்தரி தம்பி
  • "ஒரு வார்த்தையே சொல்லுவாய்" - சுந்தரி தம்பி

வரவேற்பு

படத்தக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த போதிலும் படம் வெளியாக மூன்று ஆண்டுகள் ஆனது. 2013 சூனில், திரைப்பட விமர்சகர் ராண்டார் கை எழுதுகையில், "படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், படம் வணிக ரீதியாக வெற்றியை ஈட்டவில்லை, படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை பாடல் மட்டுமே பிரபலமானது."[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தேவதாசி_(திரைப்படம்)&oldid=34379" இருந்து மீள்விக்கப்பட்டது