தேன் மழை
தேன் மழை என்பது 1966 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் காதல். நகைச்சுவைத் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தை வி. இராமசாமி தயாரித்தார்.[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா ஆகியோர் முதன்மை வேடங்களிலும் மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், சோ, சச்சு, மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 23 செப்டம்பர் 1966 அன்று வெளியானது.[2]
தேன் மழை | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
திரைக்கதை | சோ |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | செப்டம்பர் 23, 1966 |
நீளம் | 4593 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
பாஸ்கர் (ஜெமினி கணேசன்) தூக்கத்தில் நடக்கும் நோய் கொண்டவர். சிதம்பரத்தை தூக்கத்தில் பாஸ்கர் கொன்றதாக நாகலிங்கம் (மேஜர் சுந்தரராஜன்) குற்றம் சாட்டுகிறார். மேலும் பலவகையிலும் அவரை மிரட்டிவருகிறார். நிர்மலா பாஸ்கரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொள்கிறார். இறுதியாக, நாகலிங்கம் பாஸ்கர் பணக்கார பெண்ணான கிரிஜாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பாஸ்கரின் குற்றத்திற்கு நாகலிங்கம் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆதாரங்களை அழித்ததற்குப் பிரதிபலனாக வரதட்சணைப் பணத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். நிர்மலாவின் சகோதரர், வேணுவும் (நாகேஷ்), சிதம்பரத்தின் மகன் வாசுவும் (சோ), நாகலிங்கம்தான் சிதம்பரத்தைக் கொன்றவர் கொலையாளி என கண்டுபிடித்து பாஸ்கரை எப்படி காக்கிறார்கள் என்பதே கதை.
நடிகர்கள்
- பாஸ்கராக ஜெமினி கணேசன்
- நிர்மலாவாக கே. ஆர். விஜயா
- நாகலிங்கமாக மேஜர் சுந்தரராஜன்
- முத்துவாக வெண்ணிற ஆடை மூர்த்தி
- ராமாராவ்
- வேணுவாக நாகேஷ்
- சிதம்பரம்/வாசுவாக சோ
- அப்பாதுரையின் மனைவியாக டி. பி. முத்துலட்சுமி
- பாரதிமேனன்
- காந்திமதி
- இந்திராவாக மனோரமா
- கிரிஜாவாக சச்சு
- சுசீலா
- டி. எம். சௌந்தரராஜன்
- சரளா
- அப்பாதுரையாக என். இராமாராவ்
படக்குழு
- இசை - டி. கே. ராமமூர்த்தி
- ஒளிப்பதிவு - கர்ணன்
- ஒலிப்பதிவு - விஸ்வநாதன், கருணாகரன்
- கலை - அ. ராமசாமி
- படத்தொகுப்பு - அருணாசலம்
- ஸ்டில்ஸ் - ரங்கநாதன்
- ஒப்பனை - ரெங்கசாமி, ராமசாமி, சுந்தரம், பாண்டியன்
- உடை - குப்புசாமி,
- உடை உதவி - மச்சகலை
- சண்டைப் பயிற்சி - திருவாரூர் தாஸ்
- உதவி இயக்குனர்கள்- சி. என். முத்து, எம். ஆர். ராஜூ
- தயாரிப்பு நிர்வாகம் - சேதுமாதவன், குழந்தை வேலு
- தயாரிப்பு - வி. ராமசாமி
- இயக்கம் - முக்தா சீனிவாசன்
தயாரிப்பு
இத்திரைப்படம் சலனப்படங்களை அறிமுகக் குறிப்புகளைக் காட்டும்போது பயன்படுத்தப்பட்டிருந்தது.
பாடல்
இப்படத்திற்கு டி. கே. ராமமூர்த்தி இசையமைக்க, வாலி பாடல் வரிகளை எழுதினார்.[3][4]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ" | பி. சுசீலா, சரளா | 03:24 |
"நெஞ்சே நீயே" | பி. சுசீலா | 03:29 |
"கல்யாண சந்தையிலே காதல் விலை போகுமா" | பி. சுசீலா | 03:05 |
"விழியல் காதல் கடிதம்" | பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன் | 03:19 |
"என்னடி செல்லக்கண்ணே எண்ணம் எங்கோ போகுதே" | சரளா | 03:11 |
வரவேற்ப்பு
கல்கி ஒரு கலவையான விமர்சனத்தை அளித்தது, சில நடிகர்களின் நடிப்பைப் பாராட்டியது, ஆனால் இசையை விமர்சித்தது, மேலும் படம் ஒட்டுமொத்தமாக திருப்திகரமாக இல்லை என்று கூறியது.[5]
மேற்கோள்கள்
- ↑
- ↑ "1966 – தேன்மழை – முக்தா பிலிம்ஸ்" (in ta) இம் மூலத்தில் இருந்து 22 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180322142914/http://www.lakshmansruthi.com/cineprofiles/1966-cinedetails22.asp.
- ↑ (in ta) தேன்மழை (song book). Muktha Films. 1966. https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNelktSUx1VEtNWG8/view. பார்த்த நாள்: 27 January 2021.
- ↑ "Then Mazhai (Original Motion Picture Soundtrack) – EP". December 1966 இம் மூலத்தில் இருந்து 17 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210917163208/https://music.apple.com/us/album/then-mazhai-original-motion-picture-soundtrack-ep/1330500364.
- ↑