தெற்காசிய இலக்கிய விருது

தெற்காசிய இலக்கிய விருது (SAARC Literary Award) என்பது 2001ஆம்[1][2][3] ஆண்டு முதல் தெற்காசிய நாடுகளின் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய அறக்கட்டளையால் வழங்கப்படும் ஆண்டு விருதாகும். சுமன் பொக்ரேல் மற்றும் அபய் கே ஆகியோர் இந்த விருதைப் பெற்றவர்களில் சிலர்.[4] நேபாளி கவிஞர், பாடலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சுமன் போக்ரேல் இரண்டு முறை இந்த விருதைப் பெற்ற ஒரே எழுத்தாளர் ஆவார்.

தெற்காசிய இலக்கிய விருது
விருது வழங்குவதற்கான காரணம் [[தெற்காசிய நாடுகளின்
பிராந்தியக் கூட்டமைப்பு]]
முதலில் வழங்கப்பட்டது 2001
விருது வழங்குவதற்கான காரணம் இலக்கிய விருது தெற்கு ஆசியா
இதை வழங்குவோர் தெற்காசிய நாடுகளின்
பிராந்தியக் கூட்டமைப்பு

விருது பெற்றவர்கள்

ஆண்டு வாரியாக விருது பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு:

 
தெற்காசிய இலக்கிய விருது 2015 பெற்றவர்களின் குழு புகைப்படம்
 
தெற்காசிய இலக்கிய விருது 2013 பெற்றவர்கள்
ஆண்டு கவிஞர்/எழுத்தாளர் நாடு
2001 கணேஷ் வி தெவி   இந்தியா
சம்சர் ரகுமான்   வங்காளதேசம்
2002 இலட்சுமி சந்த் குப்தா   இந்தியா
2006 மைத்ரேயி புட்பா   இந்தியா
ஜாகிதா கினா   பாக்கித்தான்
லக்ஷ்மன் கெய்க்வாட்   இந்தியா
திஸ்ஸ அபேசேகர   இலங்கை
2007 மகாசுவேதா தேவி   இந்தியா
2009 ஜெயந்த மகாபத்ரா   இந்தியா
உதய் பிரகாசு   இந்தியா
கமல் கான்   இந்தியா
2010 அமீத் மிர்   பாக்கித்தான்
அபி சுபேதி படிமம்:Flag of Nepal.svg நேபாளம்
மார்க் டல்லி   இந்தியா
ஜூ   மியான்மர்
2011 இப்ராஹிம் வஹீத் படிமம்:Flag of Maldives.svg மாலைத்தீவுகள்
சையத் அக்தர் உசைன் அக்தர் (மரணத்திற்குப் பின்)   பாக்கித்தான்
2012 பக்ருல் ஆலம்   வங்காளதேசம்
ஆயிசா ஜீ கான்   பாக்கித்தான்
2013 அபய் கே   இந்தியா
சுமன் பொக்ரேல் படிமம்:Flag of Nepal.svg நேபாளம்
பர்கீன் சௌத்ரி   பாக்கித்தான்
அப்துல் காலிக் ரசீத்   ஆப்கானித்தான்
தயா திசாநாயக்க   இலங்கை
2014 தரணும் ரியாசு   இந்தியா
2015 சீதகாந்த் மகாபத்ரா   இந்தியா
செலினா ஹொசைன்   வங்காளதேசம்
சுமன் பொக்ரேல் படிமம்:Flag of Nepal.svg நேபாளம்
சாகிதா சாகீன்   பாக்கித்தான்
நிசார் அகமது சவுத்ரி   பாக்கித்தான்
ஆர்யன் ஆரூன்   ஆப்கானித்தான்
2018 நஜிபுல்லா மணலை   ஆப்கானித்தான்
2019 அனிசுசமன்   வங்காளதேசம்

தெற்காசிய நாடுகளின் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய அறக்கட்டளை, தெற்காசிய நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு "சார்க் இளம் எழுத்தாளர்கள் விருதை" வழங்குகிறது. கலிதா ப்ரோக், உருபானா அக், விவிமேரி வாண்டர்போர்டன், நந்தா டின்ட் சுவே, மனு மஞ்சில், நய்யாரா ரஹ்மான் ஆகியோர் இந்த விருது பெற்றவர்களில் சிலர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்