தூக்குமேடை (திரைப்படம்)
தூக்குமேடை (Thookku Medai) என்பது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், சக்கரவர்த்தி, மேனகா, நாகேஷ், மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தூக்குமேடை | |
---|---|
இயக்கம் | அமிர்தம் |
தயாரிப்பு | அப்பன் பிலிம்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சந்திரசேகர் சக்கரவர்த்தி மேனகா |
வெளியீடு | 1. சனவரி. 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு
மு. கருணாநிதி தூக்குமேடை என்ற சமுதாய சீர்திருத்த நாடகத்தை எழுதினார். இந்த நாடகமானது எம். ஆர். இராதாவால் பலமுறை மேடை ஏற்றப்பட்டது. இந்த நாடகத்தில் மு. கருணாநிதியும் நடித்துள்ளார்.[2] இந்த நாடகத்தை தழுவி 1982 ஆம் ஆண்டு அதே பெயரில் இப்படம் தயாரித்து வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
இசை
இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றன. பாடல் வரிகளை மு. கருணாநிதி எழுத, சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[3]
- கோடி உயர கோன் உயரும் - பி. ஜெயச்சந்திரன்
- ஆயிரம் பிரதிகள் காணும்வரை - வாணி ஜெயராம்
- குறிஞ்சி மலர் ஒன்று - வாணி ஜெயராம்
- இனி ஒரு தொல்லையும் இல்லை - டி. எம். சௌந்தரராஜன்
மேற்கோள்கள்
- ↑ "தூக்குமேடை". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
- ↑ "அஞ்சலி: சக்கரவர்த்தி (நடிகர்)". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
{{cite web}}
: Text "சக்கரவர்த்தி - மும்பையில் கொடி நாட்டிய தமிழ்க் குரல்!" ignored (help) - ↑ Raaga.com. "Thookumedai Songs Download, Thookumedai Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.