தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம்
தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம் நாற்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தியாகதுர்கத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,612 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 42,920 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 238 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- அசகளத்தூர் ஊராட்சி
- சின்னமாம்பட்டு ஊராட்சி
- எறஞ்சி ஊராட்சி
- ஈய்யனூர் ஊராட்சி
- குருபீடபுரம் ஊராட்சி
- கணங்கூர் ஊராட்சி
- கண்டாச்சிமங்கலம் ஊராட்சி
- காச்சக்குடி ஊராட்சி
- கொங்கராயபாளையம் ஊராட்சி
- கூந்தலூர் ஊராட்சி
- கூத்தகுடி ஊராட்சி
- கொட்டையூர் ஊராட்சி
- குடியநல்லூர் ஊராட்சி
- மடம் ஊராட்சி
- மேல்விழி ஊராட்சி
- முடியனூர் ஊராட்சி
- நாகலூர் ஊராட்சி
- நின்னையூர் ஊராட்சி
- ஓகையூர். எஸ் ஊராட்சி
- பல்லகச்சேரி ஊராட்சி
- பானையங்கால் ஊராட்சி
- பீளமேடு ஊராட்சி
- பொரசக்குறிச்சி ஊராட்சி
- பிரிதிவிமங்கலம் ஊராட்சி
- புது - உச்சிமேடு ஊராட்சி
- சாத்தனூர் ஊராட்சி
- சிறுநாகலூர் ஊராட்சி
- சித்தலூர் ஊராட்சி
- சித்தாத்தூர் ஊராட்சி
- திம்மலை ஊராட்சி
- தியாகை ஊராட்சி
- உடையனாச்சி ஊராட்சி
- வடபூண்டி ஊராட்சி
- வடதொரசலூர் ஊராட்சி
- வாழவந்தான்குப்பம் ஊராட்சி
- வரஞ்சரம் ஊராட்சி
- வேளாக்குறிச்சி ஊராட்சி
- வேங்கைவாடி ஊராட்சி
- விளக்கூர் ஊராட்சி
- விருகாவூர் ஊராட்சி