தினமும் என்னை கவனி

தினமும் என்னை கவனி (Dhinamum Ennai Gavani) என்பது 1997 ஆண்டைய தமிழ் துப்பறியும் திரைப்படம் ஆகும். இதை ஏ. ஆர். இரமேஷ் இயக்க, ராம்கி, சங்கவி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் பாத்திமா தயாரித்த இப்படத்திற்கு, சிற்பி இசை அமைத்துள்ளார். இப்படமானது 1997 ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[1][2][3][4]

தினமும் என்னை கவனி
இயக்கம்ஏ. ஆர். இரமேஷ்
தயாரிப்புதமிழ் பாத்திமா
கதைஏ. ஆர். இரமேஷ்
ஈ. இராமதாஸ் (உரையாடல்)
இசைசிற்பி (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுஇராஜராஜன்
படத்தொகுப்புஜி. ஜெயசந்திரன்
கலையகம்தமிழன்னை சினி கிரியேசன்
வெளியீடுஏப்ரல் 14, 1997 (1997-04-14)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

ரோலக்ஸ் ( பிரகாஷ் ராஜ் ) ஒரு புத்திசாலி சர்வதேச கடத்தல்காரன். அச்சமற்ற உதவி ஆணையர் ஜெய்குமார் ( ராம்கி ) அவரைக் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார். ஆழமான காதல் புரியும் ஜெய் குமாரும், ராஜியும் ( சங்கவி ) திருமணம் செய்து கொள்கிறார்கள். தன்னை சிறைக்கு அனுப்பிய ஜெய்குமாரை தனது வழியில் பழிவாங்க ரோலெக்ஸ் விரும்புகிறார். அதன்பிறகு, அவர் சிறையிலிருந்து தப்பித்து, தான் இறந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைக்கிறார். பின்னர் என்ன நடந்தது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

நடிகர்கள்

இசை

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசையை திரைப்பட இசையமைப்பாளர் சிற்பி அமைத்துள்ளார். 1997 ஆம் ஆண்டில் வெளியான இதன் பாடல் பதிவில் காமகோடியான், பழனி பாரதி, அறிவுமதி ஆகியோரால் எழுதப்பட்ட வரிகளுடன் நான்கு பாடல்கள் உள்ளன.

டெண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'காலேஷ் என் கையிலே' அனுராதா ஸ்ரீராம், குழுவினர் 4:56
2 'பத்திகிச்சிம்மா பம்பர வயசு' மனோ, சுவர்ணலதா, குழுவினர் 3:50
3 'செவ்வந்தி தோட்திலே' பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா 4:25
4 'வா வா பாட்டா' அனுராதா ஸ்ரீராம், குழுவினர் 4:27

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தினமும்_என்னை_கவனி&oldid=34185" இருந்து மீள்விக்கப்பட்டது