தாய்நாடு (1947 திரைப்படம்)
தாய்நாடு (Thaai Nadu) என்பது 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, எஸ். டி. வில்லியம்ஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
தாய்நாடு | |
---|---|
இயக்கம் | டி. எஸ். மணி |
தயாரிப்பு | எஸ். எம். நாயகம்[1] |
கதை | கதை டி. எஸ். மணி |
இசை | ஆர். நாராயண ஐயர் |
நடிப்பு | பாட்லிங் மணி எஸ். டி. வில்லியம்ஸ் வி. பி. எஸ். மணி டி. கே. கிருஷ்ணைய்யா எம். ஆர். சுந்தரி என். சி. மீரா |
வெளியீடு | ஆகத்து 15, 1947[2] |
ஓட்டம் | . |
நீளம் | 13960 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
இந்தப் பட்டியலானது பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[2]
- பாட்லிங் மணி
- எஸ். டி. வில்லியம்ஸ்
- வி. பி. எஸ். மணி
- டி. கே. கிருஷ்ணையா
- எம். ஆர். சுந்தரி
- என். சி. மீரா
தயாரிப்பு
இத்திரைப்படத்தை முதன்முதலில் சிங்கள மொழி பேசும் படமான கடவுனு பொறந்துவவைத் தயாரித்த எஸ். எம். நாயகம் தனது சொந்த பதாகையான சித்ரகலா மூவிடோனின் கீழ் தயாரித்தார். படத்தை டி. எஸ். மணி இயக்கினார்.[1] டி. எஸ். மணி கதை திரைக்கதையை எழுத, உரையாடலை டி. வி. நடராஜசாமி எழுதினார். ஜி. ஜி. சித்தி ஒளிப்பதிவு செய்ய, ஆபிரகாம் படத்தொகுப்பை மேற்கொண்டார். கோட்வான்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, ஒளிப்படங்களை வி. வி. ஐயர் எடுத்தார்.[2]
பாடல்கள்
இப்படத்திற்கு இசையமைத்தவர் ஆர். நாராயண ஐயர், பாடல் வரிகளை டி. வி. நடராஜ சாமி எழுதினார்.
- பாடல் பட்டியல்
- எங்கள் இந்திய பாரதியே - வி. என். சுந்தரம், ஏ. பி. கோமளா
வரவேற்பு
இப்படம் குறித்து 2017 இல் ஊடகவியலாளர் டி. பி. எஸ்.ஜெயராஜ் எழுதுகையில், "படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது" என்று கூறினார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "First Sinhala Talkie "Broken Promise" was Released 70 Years Ago on Jan 21 1947". 26 January 2017 இம் மூலத்தில் இருந்து 20 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180620022907/http://dbsjeyaraj.com/dbsj/archives/50955. பார்த்த நாள்: 20 June 2017.
- ↑ 2.0 2.1 2.2 பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 20 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180620022304/http://www.lakshmansruthi.com/cineprofiles/1947-cinedetails11.asp.
வெளி இணைப்புகள்
- யூடியூபில் எங்கள் இந்திய பாரதியே - வி. என். சுந்தரம், ஏ. பி. கோமளா கோமளா பாடிய படத்தின் பாடல்