பாட்லிங் மணி
பாட்லிங் மணி ஒரு இந்திய திரைப்படக் கலைஞர் ஆவார்.[1]
தொழில் வாழ்க்கை
ஊமைப் படங்கள்
ஊமைப்படங்கள் வெளிவந்த காலத்தில் பெரும்பாலும் மக்கள் ஏற்கெனவே அறிந்த புராண, வரலாற்றுக் கதைகளைக் கொண்டே படங்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றினிடையே, மக்களின் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக கவர்ச்சி நடனங்கள், சாகசக் காட்சிகள் என்பன சேர்க்கப்பட்டன. அக்காலத்தில் இரண்டு சாகச (ஸ்டன்ட்) நடிகர்கள் இருந்தனர். ஒருவர் ஸ்டன்ட் ராஜு, மற்றவர் பேட்லிங் மணி.[2]
பேசும் படங்கள்
பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கிய பின்னரும் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் புராண, வரலாற்றுக் கதைகளையே கொண்டிருந்தன.
1936 ஆம் ஆண்டு முதலாவது தமிழ் அதிரடி திரைப்படம் வெளியானது. பேட்லிங் மணி இத் திரைப்படத்தின் கதையை எழுதியதுடன் சாகசச் செயல்கள் புரியும் இளைஞனாக நடித்தார். மெட்ராஸ் மெயில் என்ற இத்திரைப்படம் மக்களால் விரும்பி வரவேற்கப்பட்டது.
மிஸ் சுந்தரி இவரது அடுத்த படமாகும். 1937 ஆண்டு வெளியான இப்படத்தில் பி. எஸ். சிவபாக்கியம் இவருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
சில ஆண்டுகளின் பின்னர் தாய் நாடு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தியா சுதந்திரமடைந்த 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் இத்திரைப்படம் வெளியானது.
இயக்குநராக
1938 ஆம் ஆண்டு இவர் இயக்குநராகப் பணியாற்றிய ஒரேயொரு திரைப்படமான மெட்ராஸ் சி. ஐ. டி (அல்லது ஹரிஜன சிங்கம்) வெளியானது.
திரைப்படங்களின் பட்டியல்
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | கதாசிரியர் | நடிகர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1936 | மெட்ராஸ் மெயில் | ||||
1937 | மிஸ் சுந்தரி | ||||
1938 | மெட்ராஸ் சி. ஐ. டி | ||||
1947 | தாய் நாடு |
மேற்கோள்கள்
- ↑ மோகன் ராமன் (8 நவம்பர் 2014). "What's in a name?" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 2018-05-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180516034749/http://www.thehindu.com/features/cinema/whats-in-a-name/article6578238.ece. பார்த்த நாள்: 21 ஜூன் 2018.
- ↑ "சென்னை பாஷை பேசி நடித்த ,லூசு மோகன் தந்தை யார் தெரியுமா?" இம் மூலத்தில் இருந்து 2018-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180621050743/http://makkaldesam.com/page/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2/. பார்த்த நாள்: 21 ஜூன் 2018.