தாயம்மா

தாயம்மா (Thayamma) என்பது 1991 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கோபி பீம்சிங் இயக்கியிருந்தார். இப்படத்தில் பாண்டியன், ஆனந்த் பாபு, பாபு ஆகியோருடன் கீதாவும் ஒரு தலை ராகம் சங்கரும் நடித்திருந்தனர். இப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மலையாளத் திரைப்படமான தூவல்சுபர்சத்தின் மறுஆக்கமாகும். இத்திரைப்படம் 1987 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமான திரீ மென் அண்டு எ பேபி என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த அமெரிக்கத் திரைப்படமும் 1985 இன் பிரெஞ்சு திரைப்படமான திரீ மென் அண்ட் எ கிரேடிலை அடிப்படையாகக் கொண்டது.[1]

தாயம்மா
இயக்கம்கோபி பீம்சிங்
தயாரிப்புஎம். ஜெகதீஸ்வரன்
கதைகங்கை அமரன் (வசனங்கள்)
திரைக்கதைகோபி பீம்சிங்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபாலு தேவன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்பி.எம்.எஸ். சினி ஆர்ட்சு
வெளியீடுதிசம்பர் 27, 1991 (1991-12-27)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று இளைஞர்களான பாண்டியன், ஆனந்த், பாபு ஆகியோர் நண்பர்களாகவும் அறைத் தோழர்களாகவும் இருக்கின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் படிப்பு படிக்கும் இரங்கராஜன் இவர்களது பக்கத்து வீட்டுக்காரர். பாண்டியன் ஒருநாள், தான் இல்லாத நேரத்தில் ஒரு பொட்டலம் வரும் என்று தன் நண்பர்களை எச்சரிக்கிறான். மறுநாள், ஆனந்தும் பாபுவும் தங்கள் வீட்டு வாசலில் ஒரு குழந்தையைக் கண்டனர். மூன்று இளைஞர்களும் அவளுக்கு தந்தை இல்லை என்று நம்புகின்றனர். அப்போதிருந்து, அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. முதலில் குழந்தையை கைவிட முயல்கிறார்கள் ஆனால் பின்னர் குழந்தையை கவனித்து தாயம்மா என்று பெயரிடுகிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பது கதையின் மையமாக அமைகிறது.

நடிகர்கள்

பாடல்கள்

கங்கை அமரனின் பாடல் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]

பாடல் பாடகர்(கள்) கால அளவு
"ஆளை பார்த்த சாமியார்" மலேசியா வாசுதேவன், மனோ 4:14
"எங்க பாட்டுக்கு" மலேசியா வாசுதேவன், மனோ, எஸ். என். சுரேந்தர் 4:53
"ஒரு முத்துக்கிளி கத்தும்" அருண்மொழி, மனோ, எஸ்.என்.சுரேந்தர் 4:49
"பழைய கனவாய்" கே.எஸ்.சித்ரா 4:51

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தாயம்மா&oldid=33990" இருந்து மீள்விக்கப்பட்டது