தத்துவ ரூபம்
தத்துவரூபம் என்பது ஒரு தமிழ்நூல். [1] வடமொழியில் இறைத் தத்துவம் பற்றிக் கூறப்படும் கருத்துக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இதில் கூறப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் தத்துவராயர் என்பவர். வேதாந்த தத்துவம் பற்றிப் பல்வேறு கோணங்களில் பல்வேறு தலைப்புகளில் இவர் நூல்கள் எழுதியுள்ளார்.
இந்த நூலுக்கு ‘’’மும்மணிக்கோவை’’’ என்னும் பெயரும் உண்டு. இது தத்துவராயர் மும்மணிக்கோவை. 15-ஆம் நூற்றாண்டில் இந்த நூல் எழுதப்பட்டது.
இந்த நூலில் 30 பாடல்கள் உள்ளன, அனைத்தும் தத்துவராயரின் ஆசிரியரான சொரூபானந்தரைப் போற்றி பாடப்பட்டவை.
கருவி நூல்
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005