தத்துவ தரிசனம்

தத்துவ தரிசனம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இதன் மறுபெயர் அமிர்த சாரம்.

  • காலம் 15-ஆம் நூற்றாண்டு.
  • தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
  • சொரூபானந்தர் மோகத்தை எப்படி வதைத்தார் என்று இது விளக்குகிறது.
  • இதில் 280 வெண்பாகள் உள்ளன.

நூல் அமைதி

  • வேதச் சிறப்பு, ஞானி இலக்கணம், உலகம், உலக இயல்பு, நிலையாமை முதலான செய்திகள் முற்பகுதியில் உள்ளன.
  • புத்தம், சமணம் முதலான 20 மதங்கள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு மதத்துக்கும் மூன்று பாடல். முதல் இரண்டு பாடல்களில் அம் மதம் பற்றிய விளக்கம். மூன்றாம் பாடலில் அதனை மறுத்தல். இப்படி நூல் அமைந்துள்ளது.
  • பஞ்சாட்சரம், அட்டாட்சரம் ஆகிய இரு மந்திரங்களும் இதில் கூறப்படுகின்றன. சைவ வைணவ மதங்களை ஒன்றிணைக்க இவர் முயன்றிருக்கிறார்.

கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=தத்துவ_தரிசனம்&oldid=16301" இருந்து மீள்விக்கப்பட்டது