டூரிங் டாக்கீஸ்
டூரிங் டாக்கீஸ் என்பது 2015 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதனை எஸ். ஏ. சந்திரசேகர் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். கோகிலா, அபிசரவணன் மற்றும் மனோபாலா போன்றோர் நடித்திருந்தனர்.இளையராஜா இசையில் பாடல்கள் 26 ஜனவரி 2015 இல் வெளிவந்தது. திரைப்படம் 30 ஜனவரி 2015 இல் வெளியானது.
டூரிங் டாக்கீஸ் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | எஸ். ஏ. சந்திரசேகர் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | எஸ். ஏ. சந்திரசேகர் அபிசரவணன் மனோபாலா அஸ்வின் குமார் |
ஒளிப்பதிவு | அருண்பிரசாத் |
படத்தொகுப்பு | சீறிகர் பிரசாத் எம்மான் ராஜேஷ் |
கலையகம் | ஸ்டார் மேக்கர் |
வெளியீடு | சனவரி 30, 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹152 மில்லியன் (US$1.9 மில்லியன்) |
இரு தனி கதைகள்
இத்திரைப்படத்தில் இடைவெளைக்கு முன்பு 75 என்ற கதையும், அதன் பின்பு செல்வி 5 ஆம் வகுப்பு என்ற கதையும் ஒரே படத்தில் இடம் பெற்றுள்ளன.
75 கதை
75 வயதான முதியவரின் காதலியை தேடிய பயணம் திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளது.
செல்வி 5 ஆம் வகுப்பு
இதில் செல்வி என்ற தாழ்ப்பட்ட சாதி சிறுமியை கல்வி கற்க முடியாமல் செய்யும் ஆதிக்க சாதியினரின் வன்மம் திரைப்படம் ஆகியுள்ளது.[2]
நடிகர்கள்
- எஸ். ஏ. சந்திரசேகர் - ஆண்டனி
- அபிசரவணன் - இளவயது ஆண்டனி
- அததி ராவ் - ஹேமா
- மனோபாலா - கோடீஸ்வரரன்
- ஏ. வெங்கடேஷ் - மருத்துவர்
- ரோபோ சங்கர் - சின்னையா
- வி. ஐ. எஸ். ஜெயபாலன் - பிரசிடேன்ட்
- சுனு லட்சுமி - பூங்கோடி
- அஸ்வின் குமார்
- காயத்திரி ரேமா
- ஜீவா
- அமீர்
- சூரி
- விவேக்
- சத்யன்
- விஜய் ஆண்டனி
- இளையராஜா