ஜெய் (திரைப்படம்)
ஜெய் (Jai) 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கன்னட திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எசு. நாராயண் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், அன்சு அம்பானி ஆகியோர் முதன்மை வேடங்களிலும், தியாகராஜன், ராஜ்கிரண், பானுப்ரியா ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்த இத்திரைப்படத்தினை தியாகராஜன் தயாரித்திருந்தார். இத்திரைப்படமானது 2002 இல் வெளியான ஆதி தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இத்திரைப்படம் 2004 சனவரி மாதத்தில் வெளியானது.
ஜெய் | |
---|---|
இயக்கம் | எசு. நாராயண் |
தயாரிப்பு | தியாகராஜன் |
கதை | ஜெய் பிரபாகர் (வசனம்) |
இசை | மணிசர்மா |
நடிப்பு | பிரசாந்த் அன்சு அம்பானி தியாகராஜன் ராஜ்கிரண் பானுப்ரியா ராஜன் பி. தேவ் |
ஒளிப்பதிவு | பி. கே. எச். தாசு |
படத்தொகுப்பு | பி. ஆர். சௌந்தர்ராஜ் |
நடன அமைப்பு | ரெமோ சின்னி பிரகாஷ் ராஜசேகர் |
கலையகம் | இலட்சுமி சாந்தி மூவிசு |
வெளியீடு | 14 சனவரி 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- பிரசாந்த் - ஜெய்
- அன்ஷு அம்பானி - நந்தினி
- தியாகராஜன் - வீரபாண்டி
- ராஜ்கிரண் - நல்லமுத்து
- பானுப்ரியா
- ராஜன் பி தேவ் - வச்சுரவேலு
- சீதா
- தாமு
- வையாபுரி
- சத்யன்
- "மின்னல்" தீபா
- ஜனகராஜ்
- பொன்னம்பலம்
- தேவன்
- பாண்டு
- ஷகிலா
- ஷர்மிலி
- தோதன்னா
- ராபர்ட்
- சிம்ரன் - சிறப்புத் தோற்றம்
- முமைத் கான் - சிறப்புத் தோற்றம்