ஜீவன் தியாகராஜா

ஜீவன் தியாகராஜா (Jeevan Thiagarajah) இலங்கைத் தமிழ் குடிமைப் பணியாளரும், மனித உரிமை, சமூகச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞரும் தற்போதைய வட மாகாண ஆளுநரும் ஆவார்.[1][2]

ஜீவன் தியாகராஜா
8வது வடமாகாண ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 அக்டோபர் 2021
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
முன்னவர் பி. எஸ். எம். சார்லசு
தனிநபர் தகவல்
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி சுயேச்சை
பணி குடிமைப் பணியாளர்
இனம் இலங்கைத் தமிழர்

பணி

ஜீவன் தியாகராஜா இவர் இலங்கையில் அரசு சார்பற்ற நிறுவனங்களில் 1984 முதல் செயற்பட்டு வந்தார். இலங்கையின் அரசு சார்பற்ற அமைப்பான மனித உரிமைகள் நிறுவனத்தின் தலைவராகவும், மனிதநேய நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.[3][4] 2020 திசம்பரில் இலங்கை தேர்தல்கள் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[5] 2021 அக்டோபர் 11 இல் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச இவரை 8-வது வட மாகாண ஆளுநராக நியமித்தார்.[6][7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜீவன்_தியாகராஜா&oldid=25217" இருந்து மீள்விக்கப்பட்டது