ஜி. வெங்கடசாமி

ஜி. வெங்கட் சுவாமி (G. Venkatswamy) (5 அக்டோபர் 1929 - 22 டிசம்பர் 2014) பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய நாடாளுமன்றத்திற்கு ஏழு முறை தேர்தெடுக்கப்பட்டவர். இவர் காக்கா அல்லது குடிசேலா வெங்கடசுவாமி என்று பிரபலமாக அறியப்பட்டார்.

ஜி. வெங்கடசாமி
தனிநபர் தகவல்
பிறப்பு (1929-10-05)5 அக்டோபர் 1929
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
இறப்பு 22 திசம்பர் 2014(2014-12-22) (அகவை 85)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) கலாவதி
பிள்ளைகள் 2 மகன்கள் , 3 மகள்கள்
இருப்பிடம் சிக்கந்தராபாத்

இவர் தெலங்காணாவின் பெத்தபள்ளி மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தினார். பெத்தபள்ளி மக்களவையிலிருந்து 4 முறையும், சித்திபேட்டை மக்களவையிலிருந்து 3 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மகன் கதம் விவேகானந்த் 2009-2014 வரை பெத்தப்பள்ளி மக்களவையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

சொந்த வாழ்க்கை

இவரது மகன்கள் கதம் வினோத் மற்றும் கதம் விவேகானந்த் இருவரும் அரசியல்வாதிகள்.[1]

இறப்பு

வெங்கடசாமி உடல் நலக்குறைவால் டிசம்பர் 22, 2014 அன்று ஐதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் இறந்தார். [2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜி._வெங்கடசாமி&oldid=28275" இருந்து மீள்விக்கப்பட்டது