சௌந்தர்யா ரஜினிகாந்த்

செளந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth, இயற்பெயர்: சக்கு பாய் ராவ் கெய்க்வாட். பிறப்பு: 20 செப்டம்பர் 1984) [1][2] முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்
Soundarya Rajinikanth promotes VIP2 in Delhi.jpg
பிறப்புசக்கு பாய் ராவ் கெய்க்வாட்
20 செப்டம்பர் 1984 (1984-09-20) (அகவை 40)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிகணினி வரைகலைஞர், தயாரிப்பாளர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போதுவரை
பெற்றோர்ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்
வாழ்க்கைத்
துணை
  • அசுவின் இராம்குமார்
    (தி. 2010; ம.மு. 2017)
  • விசாகன் வணங்காமுடி (தி. 2019)
பிள்ளைகள்வேத் கிருஷ்ணா அஸ்வின் (பி.2015)

திரைப்படங்கள்

வரைகலை வடிவமைப்பு

வருடம் திரைப்படம் குறிப்புகள்
1999 படையப்பா தலைப்பு மட்டும்
2002 பாபா தலைப்பு மட்டும்
2005 அன்பே ஆருயிரே
மஜா
சண்டக்கோழி
சந்திரமுகி தலைப்பு மட்டும்
2006 சிவகாசி
2007 சென்னை 600028
சிவாஜி தலைப்பு மட்டும்
2014 கோச்சடையான் இயக்கமும்

தயாரிப்பு

வருடம் திரைப்படம் குறிப்புகள்
2010 கோவா

இயக்கம்

வருடம் திரைப்படம் குறிப்புகள்
2014 கோச்சடையான்' வரைகலை வடிவமைப்பாளராகவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Ccat

"https://tamilar.wiki/index.php?title=சௌந்தர்யா_ரஜினிகாந்த்&oldid=21030" இருந்து மீள்விக்கப்பட்டது