சைவ எல்லப்ப நாவலர்

சைவ எல்லப்ப நாவலர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர். எல் என்னும் சொல் வெளிச்சத்தைக் குறிக்கும். எல்லே இலக்கம் – தொல்காப்பியம் உரியியல் இதனால் எல்லப்பன் என்னும் பெயர் கதிரவனைக் குறிக்கும் பெயர் என்பதை உணரலாம்.

இவர் இயற்றிய புராண நூல்கள் ஆறு

  1. அருணாசல புராணம்
  2. திருவெண்காட்டுப் புராணம்
  3. செவ்வந்திப் புராணம்
  4. தீர்த்தகிரிப் புராணம்
  5. திருவிரிஞ்சைப் புராணம்
  6. திருச்செங்காட்டங்குடிப் புராணம்

இவர் இயற்றிய பிரபந்தங்கள் (சிற்றிலக்கியம்) எட்டு என்பர்.

  1. திருவருணை அந்தாதி
  2. திருவருணைக் கலம்பகம்
  3. திருவாரூர்க் கோவை
  4. திருவருணைக் கோவை
  5. செவ்வந்திக் கோவை
  6. திருவிரிஞ்சைக் கோவை
  7. திருவிரிஞ்சைக் கலம்பகம்
  8. திருப்பாலைப் பந்தல் உலா

இவற்றுள் முதல் மூன்றும் அச்சாகியுள்ளன. பின் ஐந்தும் கிடைக்கவில்லை.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=சைவ_எல்லப்ப_நாவலர்&oldid=18278" இருந்து மீள்விக்கப்பட்டது