செம்பொனார்கோயில் சகோதரர்கள்
செம்பனார்கோயில் சகோதரர்கள் எஸ். ஆர். ஜி. சம்பந்தம் (பிறப்பு: 18.04.1921), எஸ். ஆர். ஜி. ராஜண்ணா (பிறப்பு: 14.03.1932) ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர்கள் ஆவர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
செம்பொனார்கோயில் சகோதரர்கள் |
---|---|
பிறப்புபெயர் | எஸ். ஆர். ஜி. சம்பந்தம் (பிறப்பு: 18.04.1921), எஸ். ஆர். ஜி. ராஜண்ணா (பிறப்பு: 14.03.1932) |
இசைப் பயிற்சி
சகோதரர்கள் இருவரும் குருகுலவாசம் கடைப்பிடித்து, தமது தாய்வழி தாத்தா பந்தநல்லூர் குருசாமி பிள்ளையிடம் நாதசுவரம் பயின்றனர். தொடந்து தாய்மாமனார் வேணுகோபால் பிள்ளையிடம் பயின்றனர். (திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளையுடன் இணைந்து வாசித்த பெருமையுடையவர் வேணுகோபால் பிள்ளை.)
இசை வாழ்க்கை
இசைப் பணி
- கேரளத்துக் கோயில்களில் வாசித்தது இனிமையான அனுபவத்தைத் தந்ததாக இச்சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
- வெளிநாடுகளுக்குப் பயணித்து இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர். சிங்கப்பூர் வானொலியில் இவர்கள் வழங்கிய வாத்திய விருந்து நிகழ்ச்சியில் புல்லாங்குழல், வயலின், தபேலா இசைக் கருவிகளும் இடம்பெற்றன.
செய்முறைப் பயிற்சி
நாள்தோறும் காலை 4.30 முதல் 6.30 வரை இவர்கள் பயிற்சி மேற்கொள்வர். இதில் வாய்ப்பாட்டும் அடங்கும். இரண்டு மணிநேர இடைவெளிக்குப் பிறகு, இந்தப் பயிற்சிகள் தொடர்ந்தன. ஒரு பெரிய கண்ணாடியின் முன்னமர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் இவர்களிடம் இருந்தது. வாசிக்கும்போது தாம் வெளிப்படுத்தும் உணர்வுகளில் தெரியும் தவறுகளை திருத்திக்கொள்ள இம்முறை பயன்பட்டதாக சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
உடன் வாசித்துள்ள தவில் கலைஞர்கள்
அடுத்தத் தலைமுறை
சம்பந்தத்தின் மகன்கள் (எஸ். ஆர். ஜி. எஸ். மோகன்தாஸ், எஸ். ஆர். ஜி. எஸ். வசந்தக்குமார்), இந்த இசைப் பரம்பரையில் ஐந்தாம் தலைமுறைக் கலைஞர்களாக நாதசுவரம் வாசித்து வருகிறார்கள். ராஜண்ணாவின் மகன்கள் இக்கலையைத் தமது தொழிலாகக் தொடரவில்லை. ஆணவம், குடும்பத்தில் மன விரிசல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவே இம்முடிவு என செவ்வி ஒன்றில் ராஜண்ணா தெரிவித்துள்ளார்; எனினும் தனது மகன்களுக்கு ஆழமான கருநாடக இசையறிவு புகட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெற்ற விருதுகள்
- கலைமாமணி, 1980
- டி. என். இராஜரத்தினம் பிள்ளை நினைவு விருது
- திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை நூற்றாண்டு விழா விருது
- வலையப்பட்டி நாதலயா விருது