திருப்பனந்தாள் டி. எஸ். மாரிமுத்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருப்பனந்தாள் டி. எஸ். மாரிமுத்து
இயற்பெயர்/
அறியும் பெயர்
திருப்பனந்தாள் டி. எஸ். மாரிமுத்து
இறப்பு 2023


திருப்பனந்தாள் டி. எஸ். மாரிமுத்து அல்லது திருப்பனந்தாள் மாரிமுத்துப் பிள்ளை (இறப்பு: 2023) என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

மாரிமுத்து தன் இளம் வயதில் தன் தந்தை சீனுவாசனிடம் இசை அடிப்படைகளைப் பயின்றார். பின்னர் கூறைநாடு பழனிவேலிடம் குருகுல முறைப்படி இசை பயின்று, இசை நிகழ்ச்சிகளில் வாசிக்கத் தொடங்கினார்.

தொழில் வாழ்க்கை

இவர் துவக்கத்தில் கூறைநாடு கோவிந்தராசனுடன் இரண்டாவது தவிலாக நாகசுரக் கலைஞர் திருவெண்காடு சுப்பிரமணியன் குழுவில் வாசித்தார். பின்னர் செம்பனார்கோயில் சகோதர்களான எஸ். ஆர். ஜி. சம்பந்தம், எஸ். ஆர். ஜி. இராஜண்ணா குழுவினருடன் ஏறக்குறைய 25 ஆண்டுகள் வாசித்தார். 1980 முதல் 1990 வரை பத்தாண்டுகள் சிங்கப்பூர் சீனுவாச பெருமாள் கோயிலில் இசைக்கலைஞராக பணிபுரிந்தார். அக்காலக்கட்டத்தில் ஆத்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் நடந்த கோயில் விழாக்களிலும், கலை நிகழ்ச்சிகளிலும் தவில் வாசித்துள்ளார்.[1]

திருப்பனந்தாள் காசிமடத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்த இவர் திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களிலும் வாசித்துள்ளார்.

விருதுகள்

இவரின் இசைப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசு 2020 ஆம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருதை அளித்து பாராட்டியது. [2][3]

குடும்பம்

மாரிமுத்துவுக்கு மூன்று மகன்கள் உண்டு. அவர்களில் குருமூர்த்தி, அருணசடேசன் ஆகிய இருவர் தன் தந்தையைப் பின்பற்றி தவில் இசைக்கலைஞர்களாக உள்ளனர்.

குறிப்புகள்

  1. "அஞ்சலி - திருப்பனந்தாள் டி.எஸ்.மாரிமுத்து: சுனாதத்தின் முகவரி!". Hindu Tamil Thisai. 2023-05-11. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
  2. "2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது!". News J : (in English). 2021-02-20. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  3. "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - கலைமாமணி விருதுகள்". www.tamilonline.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.