சீத்தலையார் பாட்டியல்

சீத்தலையார் பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூலிலிருந்து இண்டு நூற்பாக்கள் பன்னிரு பாட்டியல் உரைநூலில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. இந்த நூலைப் பற்றிய வேறு குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை. இந்த நூலின் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ள சீத்தலையார் என்னும் பெயர் இந்த நூலின் ஆசிரியரைக் குறிப்பதாகும். சீத்தலைச் சாத்தனார் என்னும் பெயரோடு தொடர்புடையது போல இப்பெயர் காணப்பட்டாலும், சீத்தலைச் சாத்தனார் என்னும் பெயர் கொண்ட பிற புலவர்களுக்கும் இவருக்கும் எந்தத் இல்லை. இவர் பாட்டியல் இலக்கணம் செய்த புலவர். பாட்டியல் நூல்கள் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தன. எனவே இந்த நூலும் அக்காலத்தியது என்பது அறிஞர்கள் கருத்து. [1]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் 1, பதிப்பு 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 9, 10 நூற்றாண்டு நூல்கள்.
"https://tamilar.wiki/index.php?title=சீத்தலையார்_பாட்டியல்&oldid=12467" இருந்து மீள்விக்கப்பட்டது