சிவலிங்கம் சிவானந்தன்
பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் (Sivalingam Sivananthan) என்பவர் அமெரிக்கத் தமிழரும், கல்விமானும், அறிவியலாளரும், தொழிலதிபரும், சிகாகோ இலினொய் பல்கலைக்கழகத்தின் நுண்ணியற்பியல் ஆய்வுக்கூடத்தின் பணிப்பாளரும் ஆவார்.
பேராசிரியர் சிவா சிவானந்தன் | |
---|---|
இனம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மட்டுவில் சரசுவதி மகா வித்தியாலயம் ட்ரிபேக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பேராதனைப் பல்கலைக்கழகம் இலினொய் பல்கலைக்கழகம், சிகாகோ |
பணி | கல்விமான் |
பெற்றோர் | சிவலிங்கம், பாக்கியம் |
ஆரம்ப வாழ்வும் குடும்பமும்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி நகருக்கு அருகே மட்டுவில் என்ற கிராமத்தில்[1] ஆசிரியர்களான சிவலிங்கம், பாக்கியம் ஆகியோரின் ஒன்பது பிள்ளைகளில் ஆறாவதாகப் பிறந்தவர் சிவானந்தன். தந்தை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொன்ட ஓர் தமிழாசிரியர். தாய் அறிவியல், சமய ஆசிரியை.[1] மட்டுவில் சரசுவதி மகா வித்தியாலயம், சாவகச்சேரி ட்ரிபேர்க் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1968-75) ஆகிய பாடசாலைகளில் ஆரம்ப, இடைநிலைக் கல்வியைக் கற்றார்.[1][2][3] பாடசாலைப் படிப்பை முடித்த பின்னர் 1976 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் பட்டப் படிப்பிக்காக சேர்ந்தார். 1980 ஆம் ஆண்டில் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்று வெளியேறினார்.[1][3][4]
பணி
பட்டம் பெற்ற பின்னர் சிவானந்தன் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியலில் உதவி-விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1982 ஆம் ஆண்டில் பட்டப்பின்படிப்புக்காக சிகாகோ இலினொய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[1] 1985 ஆம் ஆண்டில் இயற்பியலில் முதுநிலைப் பட்டமும், அதே பல்கலைக்கழகத்தில் 1988 ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3][4] தற்போது இவர் இப்பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராகவும், நுண்ணியற்பியல் ஆய்வுக்கூடத்தில் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.[4]
1998 ஆம் ஆண்டில் சிவானந்தன் வணிகத் துறையில் காலடி வைத்தார். எப்பிர் டெக்னொலொஜீசு (EPIR Technologies Inc.) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.[5] இலினொய், பொலிங்புரூக் என்ற இடத்தில் சிவானந்தன் ஆய்வுக்கூடம் (Sivananthan Laboratories Inc.) என்ற பெயரில் சொந்த ஆய்வுக்கூடம் ஒன்றையும் நிறுவி நடத்தி வருகிறார்.[1][2][3]
விருதுகள்
2013 மே மாதத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இவருக்கு "மாற்றத்துக்கான சாதனையாளர்" ("Champion of Change") விருது வழங்கியது.[1][2] அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முனைவர்களுக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்குமான பிரிவில், பேராசிரியர் சிவானந்தனுக்கு இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தை மேம்படுத்தியமைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.[6]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "White House honoree pays tribute to his hometown in Jaffna". தமிழ்நெட். 2 சூன் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36373.
- ↑ 2.0 2.1 2.2 "Makes his mark in the US". சிலோன் டுடே. 31 மே 2013 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304000240/http://www.ceylontoday.lk/51-33752-news-detail-makes-his-mark-in-the-us.html.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Dr.Sivalingam Sivananthan honored as a White House Champion of Change". யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இம் மூலத்தில் இருந்து 2013-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130609041426/http://www.jaffnahindu.org/news/dr-sivalingam-sivananthan-honored-as-a-white-house-champion-of-change-57.html.
- ↑ 4.0 4.1 4.2 "Sivalingam Sivananthan". University of Illinois at Chicago இம் மூலத்தில் இருந்து 2012-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121126102245/http://physicsweb.phy.uic.edu/people/faculty/display.php?PersonID=23.
- ↑ Rathee, Aabha (10 March 2011). "After brush with war, scientist joins renewable energy battle". Northwestern University. http://news.medill.northwestern.edu/chicago/news.aspx?id=182831.
- ↑ வெள்ளை மாளிகை, ஒரு தமிழனை கௌரவிப்பதன் உண்மைக் காரணம் என்ன? பரணிடப்பட்டது 2013-06-16 at the வந்தவழி இயந்திரம், பேரா. சிவா சிவானந்தனுடன் நேர்காணல், குலசேகரம் சஞ்சயன், சிறப்பு ஒலிபரப்புச் சேவை, யூன் 12, 2013