சிங்களவர் உடை
சிங்களவரின் உடை நோக்கிய அழகியல், தத்துவம், நெசவுத் தொழில்நுட்பம், மரபுரீதியாக உடுக்கப்பட்ட உடைகள், இன்றைய உடைகள் ஆகியவை சிங்களவர் உடை என்ற இக்கட்டுரையின் கருப்பொருள்கள் ஆகின்றன. சிங்களவர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்து சிங்களவர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லாவிடினும் மரபுரீதியான சில உடைகள் உண்டு.
இன்றைய சிங்களவர் உடைகள்
பெரும்பாலான நகர்வாழ் சிங்கள ஆண்கள் ஜீன்ஸ் போன்ற கீழாடையும் மேற்சட்டையும் உடுத்தும் வழக்கம் உடையவர்கள். பெண்களும் அவ்வாறு உடுத்தும் வழக்கம் பரவி வருகின்றது.
சிங்களவர் மரபு உடைகள்
ஆண்களுக்கு வேட்டி அல்லது சாரமும் மேல்சட்டையும், பெண்களுக்கு சேலையும் மேல்சட்டையும் சிங்களவர் மரபு உடைகள் எனலாம். பெண்கள் சேலை அணியும் முறை தமிழர்கள் அணியும் முறையிலும் வேறுபட்டது.
சிங்களவர் உடை வரலாறு
தமிழர்கள் போலவே பழங்காலத்தில் சிங்கள ஆண்களோ பெண்களோ மேலாடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆட்சியாளர்களும் போர்வீரர்களுமே பாதுகாப்பு கவசங்கள் அணியும் சிறப்புரிமை பெற்றிருந்தனர். 16 ம் நூற்றாண்டில் போர்த்துகீசர் வருகையுடன் சிங்களவர் உடை மரபில் பாரிய மாற்றங்கள் வந்தது. ஆண்கள் மேற்சட்டை (சேட்] அணியும் வழக்கமும், பெண்கள் இடையின் மேல் மேலாடை அணியும் வழக்கும் போர்த்துகீசர் வரவின் பின் நடந்தது.
படிமங்கள்
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
- http://www.everyculture.com/multi/Sr-Z/Sri-Lankan-Americans.html
- http://livingheritage.org/toplessness.htm The Garb of Innocence: A Time of Toplessness