சாருஹாசன்

சாருஹாசன் (பிறப்பு 5 சனவரி 1931) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1987ஆம் ஆண்டில் தபெரனா கதெ என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான இந்திய அரசு திரைப்பட விருது, சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.[1] இவர், நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் ஆவார்.

சாருஹாசன்
பிறப்புசனவரி 5, 1931 (1931-01-05) (அகவை 93)
பரமக்குடி,
மதராஸ் மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
இருப்பிடம்ஆழ்வார் பேட்டை, சென்னை, இந்தியா
பணிவழக்கறிஞர்
திரைப்பட நடிகர்
பெற்றோர்
  • சீனிவாசன்
  • இராஜலட்சுமி
பிள்ளைகள்
உறவினர்கள்
  • சந்திரஹாசன் (சகோதரன்)
  • நளினி (சகோதரி)
  • கமல்ஹாசன் (சகோதரன்)

வாழ்க்கைக் குறிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஊரில் வாழ்ந்த டி. சீனிவாசன் -ராஜலட்சுமி இணையரின் மூத்த மகனாக 5 சனவரி 1931ஆம் நாள் பிறந்தார்.2014 ஆம் ஆண்டில் குங்குமம் இதழுக்கு எழுதிய கட்டுரையில், "என் தந்தையார் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவருடைய குருவாக விளங்கிய யாகூப் ஹஸன் என்ற பெரியவரின் பெயரை தன் மூன்று பிள்ளைகளுக்கும் நன்றிக் கடனாகப் பெயரிட்டார்", என தன்னுடைய மற்றும் சகோதரர்கள் சந்திரஹாசன், கமல்ஹாசன் பெயர் காரணம் பற்றி தெரிவித்துள்ளார்.[2]

திரை வாழ்க்கை

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாருஹாசன்&oldid=21760" இருந்து மீள்விக்கப்பட்டது