சாணக்கியன் (திரைப்படம்)

சாணக்கியன் என்பது 1989 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள பரபரப்பூட்டும் திரைப்படமாகும். நவோதயா ஸ்டுடியோ பதாகையின் கீழ் நவோதயா அப்பச்சனால் இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தை டி. கே. இராஜீவ் குமார் இயக்கினார். படத்தில் கமல்ஹாசன், ஊர்மிளா மடோண்த்கர், ஜெயராம், மது, திலகன் ஆகியோர் நடித்தனர். படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[1][2][3][4][5][6]

சாணக்கியன்
இயக்கம்டி. கே. இராஜீவ் குமார்
தயாரிப்புஅப்பச்சன்
கதைசப் ஜான்
டி. கே. இராஜீவ் குமார்
இசைமோகன் சித்தாரா
நடிப்பு
ஒளிப்பதிவுசரோஜ் பாடி
படத்தொகுப்புவி. என். இரகுபதி
கலையகம்நவோதயா ஸ்டுடியோ
வெளியீடு1 செப்டம்பர் 1989
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கதை

ஜான்சன் (கமல்ஹாசன்) என்ற உயர் தொழில்நுட்ப நிபுணர் முதல்வர் மாதவ மேனனை (திலகன்) வானொலி அலைகள் மூலம் இயக்கப்படும் பொம்மை காரை பயன்படுத்தி கொல்ல முயல்கிறார். ஆனால் எதிர்பாராத நிகழ்வினால் அதில் அவர் தோல்வியடைகிறார். பின்னர், ஜான்சன் ஜெயராம் (ஜெயராம்) என்ற பிரபல பலகுரல் நிகழ்ச்சிக் கலைஞரிடம் ஜான்சன் தன்னை ஒரு அரசு ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பின்னர் ஜெயராமை சம்மதிக்கவைத்து, மாதவ மேனனின் குரலில் போலி குடியரசு நாள் செய்தியைப் படிக்கவைக்கிறார். அந்த உரையில் பொய்யான வாக்குறுதிகள் சொல்லப்படுகின்றன. பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் முதலமைச்சரின் குடியரசு நாள் உரை அடங்கிய அசல் ஒலி நாடாவுக்கு பதிலாக போலி ஒலி நாடாவை ஜான்சன் வைத்துவிடுகிறார். வானொலியில் ஒலிபரப்பபட்ட குடியரசு நாள் உரையைக் கேட்டு, முன்பு உறுதிசெய்யப்பட்ட செய்தியை மாற்றியதற்காக முதலமைச்சர் அவரது கட்சியிலிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

இந்த வழக்கை விசாரிக்க மாதவ மேனன் தனது நண்பரான டிஐஜி கே. கோபாலகிருஷ்ண பிள்ளையை (மது) நியமிக்கிறார். ஒலிபரப்பைக் கேட்கும்போது ஜெயராம் ஜான்சனை சந்திக்க நேர்கிறது. கதை பின்னோக்கி நகர்கிறது. ஜான்சன் மாதவ மேனனின் மகள் ரேணுவை காதலிக்கிறார். அந்த காதலை அரசியல்வாதி விரும்பவில்லை. அதனால் அவர் ஜான்சனின் குடும்பத்தை சீரழித்து கேவலப்படுத்துகிறார். (நேர்மையற்ற காவல் அதிகாரியைக் கொண்டு ஜான்சனின் பெற்றோர் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினரை விபச்சார பொய் வழக்குகளில் கைது செய்ய ஏற்பாடு செய்கிறார்.) ஆனால் இதில் ஜான்சன் உயிர் பிழைக்க, ரேணு தற்கொலை செய்துகொள்கிறாள்.

இதனால் தற்போது, ஜான்சன் மாதவ மேனனைப் பழிவாங்க எண்ணுகிறார். ஆனால் தற்போது மாதவ மேனன் ஒரு மரியாதைக்குரிய அரசியல்வாதியாகவும், முதலமைச்சர் பதவிக்கு வந்தவராகவும் உள்ளார். ஜான்சன் இதற்காக ஜெயராமின் உதவியைக் கேட்கிறார். ஆரம்பத்தில் ஜான்சனின் நோக்கங்களை அறியாத ஜெயராம் மறுக்க, பின்னர் அவரது கதையைக் கேட்டு ஜான்சனை ஆதரிக்கிறார். மேலும் அவருடன் வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்கிறார். முதலமைச்சரின் மதிப்பை அவர்கள் கெடுத்து சீரழிக்கத் தொடங்குகின்றனர். முதல்வர் வழங்கிய தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்புவதில் குறுக்கிட்டு, மாநிலத்தின் துரதிருஷ்டவசமான வேலையில்லாத இளைஞர்கள் குறித்து மூர்க்கத்தனமான கருத்துக்களைக் கூறி, தொலைக்காட்சி ஒளிபரப்பில் உள்ள காட்சிகளை ஜெயராம் ஒலிமாற்றம் செய்கிறார். மாதவ மேனனின் குரலைப் பயன்படுத்தி முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பெரும் தொகையை மோசடி செய்தது, அவரது செல்வாக்கில் கடைசி ஆணியை அடிக்கின்றனர்.

பரபரப்பான உச்சக்கட்டத்தில், ஜான்சன் தன்னை மாதவ மேனன் சுடும்படி கட்டாயப்படுத்துகிறார். மேலும் சாட்சியாக காவலர்கள் உள்ள நிலையில் ஜான்சன் இறக்கிறார். இதனால் முதலமைச்சர் ஒரு கொலைகாராகி அவரது அரசியல் எதிர்காலம் அழிகிறது.

நடிப்பு

தயாரிப்பு

படத்தின் கதை துவக்கத்தில் மம்மூட்டிக்காக எழுதப்பட்டது. ஆனால் அவரால் இப்படத்தை செய்ய முடியவில்லை. கொச்சியில் அபூர்வ சகோதரர்கள் படப்பிடிப்பில் இருந்த கமல்ஹாசனுக்கு இந்த பாத்திரம் சென்றது.[7]

இந்த படம் ஜெயராம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் முதல் படமாக ஆனது. இந்த ஜோடி படப்பிடிப்பு தளத்தில் நண்பர்களாக மாறினர்.[8]

இசை

  1. "கல்வாரி கன்னில் கன்னியசுதன்" (பிட்)
  2. "மியூசிக் ஆப் லவ்"
  3. "கருப்பொருள் இசை"

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாணக்கியன்_(திரைப்படம்)&oldid=29631" இருந்து மீள்விக்கப்பட்டது